ஐபிஎல்லில் இதுவரை அதிக கேட்சுகளை பிடித்தவர் யார்? #BBCIPLQUIZ-9

படத்தின் காப்புரிமை TWITTER

பதினொன்றாவது ஐபிஎல் சீசனில் லீக் சுற்று இன்னும் சில நாட்களில் நிறைவு பெற உள்ளது. இந்நிலையில், ஐபிஎல் குறித்து ஒரு ரசிகராக நீங்கள் எவ்வளவு விஷயங்களை நினைவில் வைத்திருக்கிறீர்கள் என்பதை நீங்களே தெரிந்து கொள்ள உங்களுக்கு ஒரு வாய்ப்பு.

வாழ்த்துகள்.

1. ஐபிஎல்லில் இதுவரை அதிக கேட்சுகளை பிடித்தவர் யார்?

1. யுவராஜ் சிங்

2. சுரேஷ் ரெய்னா

3. விராட் கோலி

2. ஐபிஎல்லில் இதுவரை அதிக முறை டக் அவுட் ஆனவர் யார்?

1. கம்பீர்

2. ரஹானே

3. ஹர்பஜன் சிங்

படத்தின் காப்புரிமை TWITTER

3. ஐபிஎல்லில் சென்னை அணியில் அதிக ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் குவித்த வீரர்கள் யார்?

1. முரளி விஜய் - ஜே.ஏ. மோர்கெல்

2. மைக் ஹஸ்ஸி - முரளி விஜய்

3. சுரேஷ் ரெய்னா - பத்ரிநாத்

4. ஐபிஎல்லில் அதிக போட்டிகளுக்கு நடுவராக செயல்பட்டவர் யார்?

1. சுந்தரம் ரவி (இந்தியா)

2. தர்மசேனா (இலங்கை)

3. சவுத்ரி (இந்தியா)

5. மிக குறைந்த எண்ணிக்கையில் ரன் எடுத்த அணி எது?

1. ராஜஸ்தான் ராயல்ஸ்

2. டெல்லி டேர்டெவில்ஸ்

3. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

விடைகள்:

1. சுரேஷ் ரெய்னா (இதுவரை 172 போட்டிகளில் விளையாடியுள்ள ரெய்னா, 92 கேட்சுகளை பிடித்துள்ளார்.)

2. ஹர்பஜன் சிங் (தற்போது சென்னை அணிக்காக விளையாடி வரும் இவர் இதுவரை 13 முறை ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகியுள்ளார்)

3. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிராக கடந்த 2011ல் விளையாடியபோது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களான மைக் ஹஸ்ஸி - முரளி விஜய் ஆகியோர் சேர்ந்து 159 ரன்கள் குவித்தனர்.)

4.சுந்தரம் ரவி (இந்தியாவை சேர்ந்த நடுவரான இவர் இதுவரை 95 போட்டிகளுக்கு நடுவராக செயல்பட்டுள்ளார்)

5. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (கடந்த 2017ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கெதிரான விளையாடிய பெங்களூரு அணி 49 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

முந்தைய ஐபிஎல் குவிஸ் போட்டிகளில் பங்குபெற :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :