ஐபிஎல்: அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய சென்னை வீரர் யார்? #BBCIPLQUIZ-10

BBCIPLQUIZ-10 படத்தின் காப்புரிமை Getty Images

பிபிசி தயாரித்துள்ள இந்த வினாடி வினா (குவிஸ்) போட்டியில் பங்கேற்று நீங்கள் ஐபிஎல் குறித்து எவ்வளவு விஷயங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறீர்கள் என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

1. ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகளில் பங்கேற்ற அணி எது?

1.மும்பை இந்தியன்ஸ்

2.ராஜஸ்தான் ராயல்ஸ்

3.சென்னை சூப்பர் கிங்ஸ்

2. ஒரு போட்டியில் பவுண்டரி மற்றும் சிக்சர்கள் மூலம் அதிக ரன்களை குவித்த வீரர் யார்?

1.கிறிஸ் கெய்ல்

2.பிரண்டன் மெக்கல்லம்

3.ஜெயசூரியா

படத்தின் காப்புரிமை Getty Images

3. ஒரு போட்டியில் பங்கேற்ற இரண்டு அணிகள் அடித்த ரன்களின் கூட்டுத்தொகை அதிகமுள்ள போட்டி எது?

1.சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்

2.கிங்ஸ் XI பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

3.மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் XI பஞ்சாப்

4. ஒரு போட்டியில் அதிக கேட்சுகளை பிடித்த வீரர் யார்?

1.சச்சின் டெண்டுல்கர்

2.டேவிட் வார்னர்

3.ஜாக் காலிஸ்

5. ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய சென்னை வீரர் யார்?

1.மோர்கெல்

2.அஸ்வின்

3.பிராவோ

படத்தின் காப்புரிமை Getty Images

விடைகள்:

1.சென்னை சூப்பர் கிங்ஸ் (கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து நேற்றுவரை (சனிக்கிழமை) 145 போட்டிகளில் பங்கேற்றுள்ளது சென்னை அணி)

2.கிறிஸ் கெய்ல் (புனே வாரியர்ஸ் அணிக்கெதிராக கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த போட்டியில் வெறும் பவுண்டரிகள் மற்றும் சிக்சர்கள் மூலமாக 154 ரன்களை குவித்தார்.)

3.சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இந்த இரண்டு அணிகளும் அடித்த ரன்களின் கூட்டுத்தொகை 469.)

4.சச்சின் டெண்டுல்கர் (2008ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் சச்சின் நான்கு கேட்சுகளை பிடித்தார்)

5.அஸ்வின் (2009ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இவர் 90 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.)

முந்தைய ஐபிஎல் குவிஸ் போட்டிகளில் பங்குபெற:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்