2018 உலகக் கோப்பை கால்பந்து: இன்று விளையாடுகிறார் ரொனால்டோ

  • 18 ஜூன் 2018

2018 உலக கோப்பை கால்பந்து போட்டிகள் வியாழக்கிழமை ரஷ்யாவில் தொடங்கிய நிலையில், இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் மூன்று போட்டி ஆட்டங்களில் பிரபல நட்சத்திர வீரர்கள் பலர் விளையாடவுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Bruno Barros / DPI / NurPhoto via Getty Images

எகிப்து மற்றும் உருகுவே, மோராக்கோ மற்றும் இரான், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய அணிகள் இன்றைய போட்டிகளில் மோதுகின்றன.

இந்த அணிகளில் பிரபல வீரர்கள் பலர் இருப்பதால் இப்போட்டிகள் கால்பந்து ரசிகளுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, புகழ்மிக்க வீரர்கள் அதிகம் இடம்பெறும் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகள் இன்று சோச்சி நகரில் இரவு 11.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் மோதுகின்றன.

கிறிஸ்டியானோ ரொனால்டோ

போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டனாக விளங்கும் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்றைய போட்டியில் ரசிகர்களின் அதிக கவனத்தை ஈர்ப்பவராக இருக்கிறார்.

ரியல் மாட்ரிட் அணியில் இவரோடு விளையாடுகின்ற 6 வீரர்கள், கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு எதிரணியில் இன்று விளையாடுகின்றனர்.

எனவே, ஸ்பெயின் அணியும், போர்ச்சுகல் அணியும், ஒன்று மற்றதன் சாதக பாதகங்களை அறிந்திருப்பதால் ஒன்றுகொன்று சளைக்காமல் விளையாடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுவரை 3 உலக கோப்பை கால்பந்து தொடர்களில் விளையாடியுள்ள ரொனால்டோ 3 கோல்கள்தான் அடித்துள்ளார், 5 முறை தங்கக் காலணி விருது வென்றுள்ளார்.

முகமது சாலா

படத்தின் காப்புரிமை Getty Images

லிவர்பூல் முன்னணி கால்பந்து வீரர் முகமது சாலா, அரபு கால்பந்து உலகத்தை ஊக்குவிக்கும் "எகிப்திய மன்னர்" என்று போற்றப்படுபவர்.

தொழில்முறை கால்பந்து வீரர்கள் சங்கத்தின் சார்பில் இந்த ஆண்டின் சிறந்த வீரராக இவர் தேர்வு செய்யப்பட்டார்.

லூயிஸ் சுவாரேஜ், கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அலன் ஷியாரெர் ஆகியோர் 38 கால்பந்து போட்டிகளில் பெற்ற சாதனைகளுக்கு இணையாக 31 பிரிமீயர் லீக் கோல்கள் அடித்து புகழ்பெற்றவர்தான் 25 வயதான சாலா.

எகிப்தின் தேசிய சின்னமாகியுள்ள இந்த இளம் கால்பந்து வீரரான சாலாவுக்கு காயம் ஏற்பட்டதால், இந்த உலக கால்பந்து போட்டியின் பிந்தைய போட்டிகளில் மட்டுமே எகிப்திற்காக விளையாடுவார் என்று கூறப்பட்டது.

ஆனால், எதிர்பார்க்கப்பட்டதைவிட மிக விரைவாக குணம் பெற்றுள்ள இவரது பெயர் இன்றைய போட்டி ஆட்டத்தில் இருந்தாலும், விளையாடுவாரா என்ற சந்தேகம் பலரிமும் உள்ளது.

இவரது ரசிகர்கள் எகிப்து-உருகுவே போட்டியை நிச்சயமாக கண்டுகளிப்பர்.

புதிய பயிற்சியாளரோடு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள ஸ்பெயின்

படத்தின் காப்புரிமை Jamie McDonald/Getty Images)

அடுத்த பணி ஒப்பந்த்தில் மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக கையெழுத்திட்ட ஸ்பெயின் கால்பந்து அணியின் பயிற்சியாளர் யோலன் லபேட்டோகி நீக்கப்பட்டு, பெர்னான்டோ ஹியர்ரோ அந்த பொறுப்பை ஏற்றுள்ளார்.

இது பற்றி லபேட்டோகி தகவல் தெரிவிக்காததால் இந்த முடிவை எடுக்க வேண்டியதாயிற்று என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

உலக கால்பந்து போட்டியில் தொடர்ந்து 11 முறை தகுதி சுற்றில் வெற்றி பெற்று வரலாறு படைத்திருப்பது ஸ்பெயின் அணியாகும்.

ஐரோப்பிய தகுதி ஆட்டங்களில் தோல்வியடையாமல் இருக்கும் நான்கு நாடுகளில் பெய்ஜியம், இங்கிலாந்து, ஜெர்மனி ஆகியவற்றோடு ஸ்பெயினும் ஒன்று.

2010 உலக கால்பந்து போட்டியில் விளையாடி கோப்பையை கைபற்றிய அணியில் இருந்த டேவிட் சில்வா, செர்ஜியோ ரோமோஸ், அன்ட்ரஸ் இனியஸ்டா, பெபெ ரெய்னா, செர்ஜியோ பஸ்கெயட்ஸ் மற்றும் கிராடு பிகுயே ஆகிய 6 கால்பந்து வீரர்கள் இந்த உலக கால்பந்து போட்டியிலும் விளையாடுவதால், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :