ஃபிஃபா: கால்பந்து தோல்விக்கு காரணமானவர் மீது இனவெறி தாக்குதல்

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனியிடம் ஸ்வீடன் அணி தோற்க காரணமாக இருந்த வீரர் மீது சமூக வலைத்தளங்களில் இனவெறி தாக்குதல் நடந்து வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜிம்மி டுர்மாஸ்

இந்த தாக்குதல்கள் குறித்து காவல் துறையில் புகார் செய்யப்படும் என்று ஸ்வீடன் கால்பந்து கூட்டமைப்பு கூறியுள்ளது.

சனிக்கிழமையன்று நடப்பு சாம்பியன் ஜெர்மனியுடன் ஸ்வீட்ன் அணி மோதிய ஆட்டத்தில், கடைசி நேரத்தில் ஸ்வீடன் வீரர் ஜிம்மி டுர்மாஸ் கால்பந்து விளையாட்டு விதிகளை மீறி ஃபௌவ்ல் உண்டாக்கியதால் ஜெர்மனிக்கு ஃபிரீ- கிக் தரப்பட்டது.

இப்போட்டியின்போது ஜெர்மனி வீரர், டிமோ வீரர் மீது டுர்மாஸின் கால் பட்டது.

இந்த ஃபிரீ- கிக்கில் ஜெர்மனி வீரர் டோனி க்ரூஸ் அடித்த கோல் ஜெர்மனி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.

இதைத்தொடர்ந்து ஃபௌவ்லுக்கு காரணமான ஜிம்மி டுர்மாஸின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் மீதான இன ரீதியான தாக்குதல் தொடங்கியது.

ஸ்வீடன் அணிக்கு விளையாடினாலும் ஜிம்மியின் பெற்றோர் துருக்கியில் இருந்து குடியேறியவர்கள் ஆவர். அவர்கள் சிரியாவின் அசீரிய கிறித்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

ஜிம்மி மீது வெறுப்பு காட்டப்படுவது மிகவும் முட்டாள்தனமானது என்று அவரது சக வீரர் ஜான் கைடெட்டி கூறியுள்ளார்.

"எதைப்பற்றியும் நான் கவலைப்படவில்லை. என் நாட்டுக்காக விளையாடுவதில் நான் பெருமைப்படுகிறேன்," என்று ஜிம்மி கூறியுள்ளார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கால்பந்து உலகக்கோப்பை: பந்துகளை பரிசோதிக்கும் ரோபோ

ஃபிரீ-கிக்கில் ஜெர்மனி கோல் அடிக்காமல் இருந்திருந்தால் ஒன்றுக்கு ஒன்று என ஆட்டம் சமனில் முடிந்திருக்கும். தற்போது வெற்றி பெற்றுள்ளதால், ஜெர்மனி புள்ளிகள் பட்டியலில் ஸ்வீடனை சமன் செய்துள்ளது.

புதன்கிழமை நடக்கவுள்ள குரூப்-எஃப்இன் கடைசி ஆட்டத்தில் தென்கொரிய அணியுடன் ஜெர்மனி மோதுகிறது.

இந்த வெற்றிக்குப் பிறகு ஜெர்மனி அணியினர் அதைக் கொண்டாடிய விதம், ஸ்வீடன் அணியினரை கோபப்படுத்தியுள்ளது.

"அவமானப்படுத்தும் வகையில் சிலர் கொண்டாடினார்கள். அதனால் தேவையற்ற கோபம் உண்டானது. பின்னர் அதற்கு மன்னிப்பு கேட்டார்கள். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்," என்று ஸ்வீடன் அணியின் பான்டஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :