விம்பிள்டனில் ஆதிக்கம் செலுத்திய மூன்று பெண்கள்

2018-ம் ஆண்டுக்கான விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று துவங்கியுள்ளது. விம்பிள்டன், அமெரிக்க ஓபன், பிரஞ்ச் ஓபன், ஆஸ்திரேலியா ஓபன் ஆகிய நான்கு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பே மிகவும் பழமையான மற்றும் முக்கியமான டென்னிஸ் தொடராக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த காலங்கள் விம்பிள்டன் போட்டியின் பெண்கள் பிரிவில் ஆதிக்கம் செலுத்திய மூன்று முக்கிய வீராங்கனைகளை பார்ப்போம்.

மார்டினா நவ்ராட்டிலோவா

படத்தின் காப்புரிமை Getty Images

செக்கோஸ்லோவாக்கியா சேர்ந்த மார்டினா நவதிலொவா 1956-ம் ஆண்டு பிறந்தார். செக்கோஸ்லோவாக்கியாவில் பிறந்திருந்தாலும் அமெரிக்கா சார்பில் விளையாடியதுடன் அமெரிக்காவின் பயிற்சியாளராகவும் இருந்தார்.

மார்டினா தனது 15 ஆம் வயதில் செக்கோஸ்லோவாக்கியா தேசிய டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இடது கை விராங்கனையான மார்டினா , 1972 முதல் 75 வரை செக்கோஸ்லோவாக்கியா நாட்டின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையாக இருந்தார். பிறகு 18வது வயதில் தஞ்சம் தேடி அமெரிக்கா வந்த இவர், பிறகு அமெரிக்க டென்னிஸ் சங்கத்தில் இணைந்து படிப்படியாக முன்னேறினார்.

1978-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன் விம்பிள்டன் பட்டத்தை வென்றதன் மூலம், தனது பதக்க பட்டியலைத் தொடங்கிய மார்டினா 18 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். அதில் மிகவும் மதிப்புமிக்க 8 விம்பிள்டன் சாம்பியன்ஷிப் பட்டமும் அடங்கும். 1882-ம் ஆண்டு மார்டினா தான் விளையாடிய 93 போட்டிகளில் 90 போட்டிகளில் வெற்றி பெற்றார்.

டென்னிஸ் கோர்ட்டுக்கு வெளியேவும் மார்டினா ஒரு தைரியமான வாழ்க்கையை வாழ்ந்தார். தான் ஒரு ஒருபாலின உறவுக்காரர் என வெளிப்படையாக அறிவித்த முதல் விளையாட்டு வீராங்கனை இவரே. LGBT எனப்படும் ஒருபாலின உறவுக்காரர்கள் மற்றும் திருநங்கைகளின் சம உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர் இவர்.

தான் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக 2010-ம் ஆண்டில் மார்டினா கூறினார். அறுவை சிகிச்சைக்கு பின்பு, புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த அவர், மீண்டும் சமூக பணிகளில் ஈடுபட தொடங்கினார்.

ஸ்டெஃபி கிராஃப்

படத்தின் காப்புரிமை Getty Images

1988 முதல் 1996 வரை விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பில் ஆதிக்கம் செலுத்திய ஸ்டெஃபி கிராஃப், 22 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். அதில், ஏழு விம்பிள்டன் சாம்பியன்ஷிப் பட்டமாகும். 1988, 89,92,93,95,96 ஆகிய ஆண்டுகளில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கிராஃப் வென்றுள்ளார்.

தனது 3-ம் வயதிலே சென்னிஸ் பேட்டைச் சுழற்ற ஆரம்பித்த கிராஃப், 4-ம் வயதில் பயிற்சியை பெற்று 5-ம் வயதில் முதல் போட்டியில் கலந்துகொண்டார்.

1988-ம் ஆண்டில் விம்பிள்டன், அமெரிக்க ஓபன், பிரஞ்ச் ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் என நான்கு பட்டத்தையும் கைப்பற்றிய கிராஃப், கோல்டன் ஸ்லாம் பட்டத்தைப் பெற்ற முதல் மற்றும் ஒரே டென்னிஸ் வீரராக உருவெடுத்தார். அத்துடன் ஒவ்வொரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் நான்கு முறை வென்ற ஒரே வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images

வேகம் மற்றும் பலமான கைகளை கொண்டவராக அறியப்பட்ட கிராஃப், பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் தரவரிசையில், 377 வாரங்கள் முதலிடத்தில் இருந்தார்.

1999-ம் ஆண்டு தரவரிசை பட்டியலில் 3-ம் இடத்தில் இருந்தபோது கிராஃப் தனது ஓய்வை அறிவித்தார். ஆண்கள் டென்னிஸில் முன்னணி வீரராக இருந்த ஆண்ட்ரே அகாசியை, 2001-ம் ஆண்டு கிராஃப் திருமணம் செய்துகொண்டார்.

செரீனா வில்லியம்ஸ்

அமெரிக்காவைச் சேர்ந்த செரீனா வில்லியம்ஸ், தற்போதைய டென்னிஸ் உலகின் நம்பிக்கை நட்சத்திரம்.

ஒற்றையர் பிரிவில் 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை இவர் வென்றுள்ளார். மொத்தம் உள்ள நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தில், மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ஆறு முறை வென்ற ஒரே வீரர் இவரே. 2002,2003,2009,2010,2012,2015,2016 ஆகிய ஆண்டுகளில் என ஏழு முறை விம்பிள்டன் பட்டத்தை செரீனா பெற்றுள்ளார். அத்துடன் நான்கு ஒலிம்பிக் தங்க பதக்கத்தையும் இவர் வென்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் தரவரிசையில், 2002-ம் ஆண்டு முதல் முறையாக முதலிடத்தை செரீனா பெற்றார். அதன் பிறகு 2002 முதல் 2017 வரை எட்டு முறை நம்பர் 1 இடத்தைப் பிடித்தார்.

பிரவசத்தினால் சிறிது காலம் டென்னிஸ் விளையாடாமல் இருந்த செரீனா, 2018-ம் ஆண்டு மீண்டும் தனது களத்தில் இறங்கினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்