கால்பந்து உலக கோப்பை: காலிறுதியில் நுழைந்தது இங்கிலாந்து

  • 4 ஜூலை 2018
கால்பந்து உலக கோப்பை: கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதியில் இங்கிலாந்து படத்தின் காப்புரிமை AFP

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற கொம்பியாவுக்கு எதிரான கால்பந்து போட்டியில் பெனால்டி முறையில் அதிக கோல் அடித்து இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் சமாராவில் சனிக்கிழமை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ஸ்வீடனோடு இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது.

ஸ்பார்டக் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில், முதலில் தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி இங்கிலாந்து கோல் போட்டு கணக்கை தொடங்கியது.

பின்னர், கொலம்பியா ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்த நிலையில், பெனால்டி முறைப்படி அதிக கோல் அடித்த இங்கிலாந்து வெற்றிபெற்றது.

கொலம்பிய கால்பந்து வீரர் கார்லோஸ் பாக்கா அடித்த பெனால்டியை இங்கிலாந்தின் கோல் கீப்பர் ஜோர்தான் பிக்ஃபோர்டு சிறப்பாக தடுத்தார், அதனை தொடர்ந்து எரிக் டையர் வெற்றியை உறுதி செய்த கோலை அடித்தார்.

படத்தின் காப்புரிமை Richard Heathcote/Getty Images

தோல்வியடைதால் வெளியேறுகின்ற முக்கிய ஆட்டத்தில் 2006ம் ஆண்டுக்கு பிறகு, முதல்முறையாக இங்கிலாந்து வெற்றிபெற்றுள்ளது.

ஹாரி கேனே மீதான ஃபவுலால் இங்கிலாந்து கிடைத்த பெனால்டி வாய்ப்பு கோலாக மாறியது.

ஆனால், ஆட்டம் முடியும் நேரத்தில் கொலம்பியாவின் எர்ரி மினா என்கிற கால்பந்து வீரர் அடித்த கோலால் ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது.

ஆட்டத்தில் முடிவில் இங்கிலாந்தும், கொலம்பியாவும் 1-1 என்று சமநிலையில் இருந்ததால், பெனால்டி முறைப்படி இங்கிலாந்து அதிக கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தது.

முன்னதாக சுவிட்சர்லாந்துக்கும், ஸ்வீடனுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், ஸ்வீடன் ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றது. வரும் சனிக்கிழமை இங்கிலாந்துடன் ஸ்வீடன் மோதவுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :