உலகக்கோப்பை கால்பந்து: 28 ஆண்டுகளுக்கு பின் அரையிறுதியில் இங்கிலாந்து

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் சுவீடன் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

உலக்கோப்பை கால்பந்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஹேரி மகுவெர்

சற்று முன்பு நடந்த போட்டியில் இரண்டுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து சுவீடன் அணியை வீழ்த்தியது. இதனால், 1990க்கு பிறகு முதல் முறையாக இங்கிலாந்து அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

இங்கிலாந்துக்காக ஹேரி மகுவெர் மற்றும் டெலி ஆலி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

மாஸ்கோவில் நடக்கவுள்ள அடுத்த காலிறுதியில் ரஷ்யா மற்றும் குரேசிய அணிகள் மோதுகின்றன. அதில் வெல்லும் அணியுடன் இங்கிலாந்து வரும் புதனன்று நடக்கவுள்ள அரை இறுதியில் மோதவுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

டெலி ஆலி

இங்கிலாந்து கோல் கீப்பர் ஜோர்டான் பிக்போர்டு சுவீடன் அணியின் மூன்று கோல் முயற்சிகளை சிறப்பாகத் தடுத்தது சுவீடனின் தோல்விக்கு காரணமாக இருந்தது.

ஏற்கனவே நடந்த முதல் இரண்டு காலிறுதி ஆட்டங்களில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் வென்று அரை இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :