2018 உலகக் கோப்பை: இறுதிப் போட்டிக்கு செல்லும் அணி எது?
2018 உலகக் கோப்பை கால்பந்தின் முதலாம் அரையிறுதி போட்டி , 1998ஆம் ஆண்டின் சாம்பியனான பிரான்ஸுக்கும், பெல்ஜியத்தின் "கோல்டன் தலைமுறை" என்று கூறப்படும் அணிக்கும் இடையே புனித பீட்ஸ்பர்க் நகரில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது.
இதில் வெற்றிபெறும் அணி, புதன்கிழமை நடைபெறும் இங்கிலாந்து, குரோஷிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணியோடு இறுதி ஆட்டத்தில் மோதும்.
அடுத்த ஞாயிற்றுக்கிமை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிக்கு கொண்டு செல்கின்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க போட்டியாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு நாளை புதன்கிழமை நடைபெறும் போட்டியை காண கடைசி நேரத்தில் இங்கிலாந்து கால்பந்து ரசிகர்கள் ரஷ்யாவுக்கு விரைந்து கொண்டிருக்கின்றனர்.
புதன்கிழமை நடைபெறும் அரையிறுதி போட்டியில் வென்று உலகக் கோப்பை கால்பந்து இறுதியாட்டத்தில் முதல்முறையாக நுழைந்துவிட வேண்டும் என்று குரோஷியா நம்பிக்கையோடு உள்ளது.
இங்கிலாந்து அணியினரோ இறுதிப்போட்டியில் நுழைவதற்கு 52 ஆண்டுகள் காத்திருந்து வருவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற நம்பிக்கையோடு இந்த அரையிறுதியில் விளையாடவுள்ளனர்.
புதன்கிழமை நடைபெறும் அரையிறுதி ஆட்டம் இங்கிலாந்து குரோஷியா அணிகளுக்கு இடையே நடைபெறும் 8வது ஆட்டமாக இருக்கும்.
இதற்கு முன்னால் போட்டியிட்டுள்ள 7 ஆட்டங்களில் இங்கிலாந்து 4 முறையும், குரோஷியா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி சம நிலையில் முடிவடைந்தது.
பிற செய்திகள்:
- தாய்லாந்து குகை: “அனைவரும் இன்றே மீட்கப்பட வாய்ப்பு” - LIVE
- உப்பு தண்ணீரை பயன்படுத்தி பைக்கை ஓட வைத்த 10ம் வகுப்பு மாணவி
- தொப்பை இருந்தால் வேலை இல்லை - கர்நாடக காவல் துறை உத்தரவு
- நீட் தேர்வில் நீதிமன்றத் தீர்ப்பால் புதிய திருப்பம்: தீர்வா, குழப்பமா?
- ட்விட்டர் டிரெண்டிங்கிலிருந்து காணாமல் போன 'அமித் ஷாவே திரும்பிப் போ'!
- போதுமான அதிகாரங்கள் இன்றி நிறைவேற்றப்பட்ட லோக் ஆயுக்தா: எதிர்கட்சிகள் எதிர்ப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்