உலகக் கோப்பை கால்பந்து: இறுதிப் போட்டிக்கு செல்லுமா இங்கிலாந்து?

2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் கடைசி அரையிறுதி ஆட்டத்தில், இன்று (புதன்கிழமை) இங்கிலாந்தும் குரேஷியாவும் இன்னும் சில மணிநேரங்களில் மோதவுள்ளன.

படத்தின் காப்புரிமை Matthias Hangst/Getty Images

1990ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி பாபி ரோப்சனின் தலைமையிலான இங்கிலாந்து அணி மேற்கு ஜெர்மனியோடு அரையிறுதியில் போட்டியிட்டபோது, குரேஷியா என்ற ஒரு நாடே இருக்கவில்லை.

அந்நேரத்தில் இங்கிலாந்து அணிக்காக இப்போது விளையாடுகின்ற வீரர்களில் 17 பேர் பிறந்திருக்கவேயில்லை.

ஸ்வீடனோடு நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் எவ்வித பதற்றமும் இல்லாமல், 2:0 என்ற கோல்கணக்கில் வெற்றி கொண்டதை தொடர்ந்து, இங்கிலாந்து கால்பந்து அணி பயிற்சியாளர் சௌத்கேட் அதே 11 பேரை அரையிறுதியிலும் ஆடுவதற்காக தேர்தெடுத்துள்ளார்.

இந்த அரையிறுதி போட்டியில் வெற்றிபெற்று உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பங்கேற்கும் வரலாற்று பதிவாக அமையும் என்ற எதிர்பார்ப்போடு இங்கிலாந்து அணி களம் இறக்குகிறது.

படத்தின் காப்புரிமை Alex Livesey/Getty Images

மேற்கு ஜெர்மனியொடு நடைபெற்ற போட்டியில் பெனால்டி முறையில் தோல்வியடைந்த பின்னர் நடைபெறுகின்ற இங்கிலாந்தின் மிக முக்கிய உலகக் கோப்பை கால்பந்து போட்டியாக இது இருக்கும்.

இன்றைய அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றால், 52 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கின்ற மாபெரும் வெற்றியாக இந்த போட்டி கருதப்படும்.

காலிறுதி ஆட்டத்தில் குரேஷியா அணி ரஷ்யாவை வென்று அரையிறுதியில் நுழைந்துள்ளது.

முன்னதாக, நேற்று, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் பிரான்ஸ் - பெல்ஜியம் இடையே நடந்த அரை இறுதி உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் பெல்ஜியம் தோல்வி அடைந்ததை அடுத்து, இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது பிரான்ஸ்.

எனவே இன்று வெற்றிப்பெரும் அணி இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :