உலகக்கோப்பை கால்பந்து: மூன்றாவது இடத்தை பிடித்தது பெல்ஜியம்

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் 2018 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் பெல்ஜியம் வெற்றி பெற்றுள்ளது,

உலகக்கோப்பை

பட மூலாதாரம், TF-Images/Getty Images

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணியோடு மோதிய பெல்ஜியம் சிறப்பாக விளையாடி 2 : 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டி தொடங்கிய 4வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி வீரர் தாமஸ் மியுனியர் கோல் போட பெல்ஜியம் இங்கிலாந்தைவிட முன்னிலை பெற தொடங்கியது.

ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் பெல்ஜிய அணி வீரர் ஹஸார்டு அடித்த கோலால் பெல்ஜியம் வெற்றியை உறுதி செய்து கொண்டது.

2018 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளின் அரையிறுதி ஆட்டங்களில் தோல்வியடைந்த இங்கிலாந்துக்கும், பெல்ஜியத்திற்கும் இடையில், 3வது இடத்தை முடிவு செய்கின்ற போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.

செயிண்ட் பீட்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில், 2018 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை பெல்ஜியம் இங்கிலாந்து அணிகள் பெற்றுள்ளன.

பட மூலாதாரம், Dan Mullan/Getty Images

முன்னதாக நடைபெற்ற இங்கிலாந்தும், குரேஷியாவும் மோதிய அரையிறுதி ஆட்டத்தில் 1: 2 என்ற கோல்கணக்கில் இங்கிலாந்து தோல்வியை தழுவியது.

இதன் மூலம், 52 ஆண்களுக்கு பிறகு, உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இறுதி ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பை இங்கிலாந்து இழந்தது.

பிரான்ஸூம், பெல்ஜியமும் மோதிய இன்னொரு அரையிறுதி ஆட்டத்தில் 1:0 என்ற கோல்கணக்கில் பெல்ஜியம் தோல்வியை தழுவியது.

அதற்கு முன்னர் இதே உலகக்கோப்பை போட்டியில் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, பெல்ஜியமும் மோதியபோது, பெல்ஜியம் அணி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :