பிரித்வி ஷா: முதல் ஆட்டத்தில் நூறு அடித்த இளம் வீரர் அடுத்த சச்சினா?

இந்திய கிரிக்கெட் வானில் 18 வயதில் ஒரு இளம் நட்சத்திரம் சதமடித்து அறிமுகமாகியுள்ளது. இவரது இளம் வயது அறிமுகம் சச்சினையும், அதிரடி ஆட்டம் சேவாக்கையும் நினைவுபடுத்துவதாக உள்ளது.
இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணி மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான 18 வயது இளம் வீரர் பிரித்வி ஷா சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
குஜராத்தின் ராஜ்கோட்டில் இன்று வியாழக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ராகுல் ரன் எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய புஜராவுடன் அணி சேர்ந்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா மின்னல் வேகத்தில் விளையாடி 56 பந்துகளில் அரை சதமும், 99 பந்துகளில் சதமும் அடித்தார். இதில் முக்கியமானது பிரித்விஷா-வுக்கு இது முதல் போட்டி
அறிமுக
அறிமுக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலேயே சதம் மிக இளைய இந்திய வீரராகவும், மிக இளம் வயதிலேயே இந்தியாவுக்கு சதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்தவராகவும் வருகிறார் பிரத்வி.
1933ம் ஆண்டு இந்திய மண்ணில் இந்தியா விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக தமது அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்துப் புகழ் பெற்றவர் லாலா அமர்நாத். ஆனால் அப்போது அவரது வயது சுமார் 22.
இளம் வயதில் களமிறங்கிய 2வது வீரர்
டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக 293-வது கிரிக்கெட் வீரராக பிரித்வி ஷா களமிறங்கினார். அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 15-வது இந்திய கிரிக்கெட் வீரராக பிரித்வி ஷா இருக்கிறார்.
- இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்: 40 ஆண்டுகளுக்கு பின் தேர்வு
- முதல்முறையாக தங்கம் வெல்லாத இந்தியா : கபடியில் ஆதிக்கம் முடிவு பெறுகிறதா?
யார் இந்த பிரித்வி ஷா
தனது 4 வயதில் தாயை இழந்த பிரித்வி ஷா, மும்பையின் புறநகரிலுள்ள விராரில் வளர்ந்தார்.
எட்டாம் வயதில் பந்திராவிலுள்ள ரிஸ்வி ஸ்பிரிங்ஃபீல்டு பள்ளியில் சேர்க்கப்பட்டதுதான், இவரை தொழில்முறை கிரிக்கெட் வீரராக ஆக்கியது.
எ பிரிவு லீக் போட்டியில், 14வது வயதில் சதம் அடித்து இளம் கிரிக்கெட்டர் என்ற பெருமையை இவர் வென்றார்.
2014ம் ஆண்டு தனது பள்ளிக்காக விளையாடிய விளையாட்டில் 330 பந்தில் 546 ரன்கள் இவர் எடுத்தார்.
16 வயதுக்குட்பட்டோர் மும்பை கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த இவர் 19 வயதுக்குட்பட்டோர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உலக கோப்பையை வென்றுள்ளார்.
2018ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பிரித்வி ஷாவை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஒரு கோடியே 2 லட்சத்துக்கு எடுத்தது.
கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிராக இவர் விளையாடியபோது, ஐபிஎல் வரலாற்றில் விளையாடிய மிக இளம் வீரர் என்ற பெருமை பெற்றார்.
இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்ற ஏழைப் பெற்றோரின் மகள்

பிற செய்திகள்:
- கேரளா: ஆதிவாசியின் ஆச்சரியமூட்டும் வாழ்க்கை
- தமிழ்நாட்டில் 7-ம் தேதி கனமழை: 'சிவப்பு' எச்சரிக்கை
- ‘டிரம்ப் எச்சரிக்கை’: அமெரிக்கர்களுக்கு வந்த அவசர செய்தி
- சைவ சித்தாந்த பேராசிரியரை எதிர்க்கும் இந்துத்துவ அமைப்புகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்