விராட் கோலி: ஆஸ்திரேலிய மைதானங்களை காதலிப்பவர்

விராட் கோலி: ஆஸ்திரேலிய மைதானங்களை காதலிப்பவர் படத்தின் காப்புரிமை RYAN PIERSE

பசுமையான புல்வெளியுடைய அடிலெய்டு ஓவல் மைதானத்திற்கு விராட் கோலியின் வாழ்க்கையில் சிறப்பிடம் உண்டு.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் இங்கு நடைபெற்ற போட்டியில்தான் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்து விராட் கோலி அசத்தினார்.

அதற்கு பின்னர்தான் ரன் குவிக்கும் கோலியின் காலம் தொடங்கியது. இந்த இரண்டு சதங்களுக்கு முன்னாலும், சர்வதேச கிரிக்கெட்டில் பிரபலமானவராகதான் அவர் திகழ்ந்தார்.

ஆனால், எல்லா ஏற்றங்களுக்கும் ஓர் இறக்கம் உண்டுதானே. விராட் கோலியின் தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையும் ஏற்ற, இறக்கங்கள் கொண்டதாகவே இருந்துள்ளது.

ரன் குவிப்பில் சரிவு

படத்தின் காப்புரிமை Raj K Raj/Hindustan Times via Getty Images

மேகமூட்டமான வானிலையில், பந்து வேகமாக சுழல்கின்ற களத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஜேம்ஸ் ஆன்டர்சன் விராட் கோலியை நிஜமாகவே முட்டாளாக்கிவிட்டார்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் சர்வதேச போட்டிகளில் ஜொலித்த விராட் கோலியா இவர் என்று ரசிகர்களே அதிர்ச்சியடைந்தனர்.

இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளில் 1 - 3 என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது.

விராட்கோலி இந்த போட்டிகளில் அடித்த ரன்கள்: 1, 8, 25, 0, 39, 38, 0, 76, 20.

இத்தகைய சொற்பமான ரன் பட்டியல் விராட் கோலியுடையது என்றே பலரும் நம்பவில்லை. இந்த காலத்தில்தான் விராட் கோலி பற்றிய விமர்சனங்கள் அதிகமாக எழுந்தன. விராட் கோலி தன்னுடைய சுயநல விளையாட்டுக்கான விலையை அளித்துள்ளார் என்று விமர்சகர்கள் தெரிவித்தனர்.

சிலர் விராட் கோலியின் ஆதிக்க நடத்தையை கேள்விக்குட்படுத்தினர்.

காதலியை இங்கிலாந்து அழைத்து சென்ற கோலி

படத்தின் காப்புரிமை JEWEL SAMAD

அப்போதைய சட்டங்களின்படி, பெற்றோரும், குழந்தைகளும், மனைவியுமே வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் விராட் கோலி திருமணம் செய்திருக்கவில்லை. பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை காதலித்து வந்தார்.

அவர்களின் காதல் விவகாரம் கிசுகிசுப்புகளின் தலைப்பாக மாறி விவாதிக்கப்பட்டு வந்தது.

இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியின்போது, அனுஷ்காவை தன்னோடு வருவதற்கு அனுமதிக்க வேண்டுமென பிசிசிஐ- யிடம் விராட் கோலி கோரியிருந்தார்.

விளையாட்டு வீரர்கள் தங்களின் காதலியை வெளிநாட்டு பயணங்களின்போது அழைத்து செல்லக்கூடாது என்ற நியதி இருந்தபோதும், பிசிசிஐ விதிகளை தளர்த்தி, இங்கிலாந்து போட்டியின்போது விராட் கோலியுடன் அனுஷ்கா செல்ல அனுமதி அளித்திருந்தது.

இந்த போட்டியில் அனுஷ்கா இருந்ததால், விராட் கோலியால் விளையாட்டில் ஒருமுகப்படுத்தி விளையாட முடியவில்லை என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

பிற காரியங்களில் கவனம் செலுத்துவதைவிட விராட் கோலி கிரிக்கெட் விளையாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மறைமுகமாக அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.

மிக விரைவாக ரன் குவிக்கும் விராட் கோலின் கணக்கில் திடீரென ஓர் இடைவெளி விழுந்துவிட்டது.

இந்தியா திரும்பியவுடன் விராட் கோலி அனைத்து விதமான விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக போட்டிகளில் ஒப்பீட்டு அளவில் விராட் கோலி நன்றாக விளையாடினார்.

ஆஸ்திரேலியாவோடு போட்டி

படத்தின் காப்புரிமை GARETH COPLEY

ஆஸ்திரேலியாவோடு நடைபெற்ற கிரிக்கெட் போட்டி கடும் சவால் நிறைந்ததாக விராட் கோலிக்கு அமைந்தது.

விராட் கோலி பயன்படுத்தும் பேட், ஆஸ்திரேலியாவின் விரைவான பந்து வீச்சாளர்களை தும்சம் செய்யும் என்ற நம்பப்பட்டது.

முதல் 11 வீரர்களில் விராட் கோலியை சேர்க்க வேண்டுமா என்பதில் நிபுணர்கள் வேறுப்பட்ட கருத்துகளை கொண்டிருந்தனர்.

ஆனால், முடிவோ சற்று வித்தியாசமாக இருந்தது. வழக்கமாக அணித் தலைவராக இருக்கும் மகேந்திர சிங் தோனி காயமடையவே, இந்திய அணியில் பேட்ஸ்மேன்களில் முக்கியமானவரான விராட் கோலிக்கு தற்காலிக அணித் தலைவர் பொறுப்பு கிடைத்தது,

மட்டை பிடித்து அடித்து சரியாக ஆடாதவராக அதிக விமர்சனங்களை சந்தித்து வந்த நிலையில், அணித்தலைவர் என்ற பொறுப்பு கிடைத்தது அவருக்கும் முக்கிய சவாலாக அமைந்துவிட்டது.

ஆஸ்திரேலிய ஊடகங்களும் விராட் கோலியை இலக்கு வைத்து செய்திகள் வெளியிட்டன. பின்னர் விராட் கோலி இரண்டு இன்னிங்ஸில் இரண்டு சதங்களை அடித்து அசத்தினார்.

இங்கிலாந்து பயணத்தின்போது மோசமாக விளையாடியதை மாற்றி சிறந்த ஆட்டத்தை விராட் கோலி ஆஸ்திரேலியாவில் வெளிப்படுத்தினார். அவரை விமர்சனம் செய்தோர் அனைவரும் அமைதியாகினர்.

ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை விராட் கோலி எளிதாக, திறமையாக கையாண்டார். அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

ஆனால், விரைவான பந்துகளை எதிர்கொள்ள முடியாதவர், அதிக உயரத்தில் துள்ளி வரும் (பௌன்ஸிங்) பந்துகளை அடித்து விளையாடாதவர், எதிரணி வீரர்களை இழிவாக பேசுவதால் ஒருமுகப்படுத்தி விளையாடாதவர் என்ற எல்லா நியதிகளையும் விராட் கோலி தன்னுடைய ரன் குவிப்பின் மூலம் அமைதியாக்கிவிட்டார்.

நான்கு டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி மட்டும் 692 ரன்கள் குவித்திருந்தார். அந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய திறமையை விராட் கோலி உறுதிப்படுத்தினார்.

அடிலெய்டுவில் முதல் டெஸ்ட் சதம்

படத்தின் காப்புரிமை Getty Images

2011-12ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் விளையாடிய இந்த கிரிக்கெட் டெஸ்ட் தொடரை மறக்கவே முடியாது. நான்கு டெஸ்ட் போட்டிகளில் மிகவும் மோசமான தோல்விகளை இந்திய அணி சந்தித்தது.

ஆனால், இந்த சிறப்பு தொடர் விராட் கோலி முதல் சதம் அடித்த டெஸ்ட் தொடராக அமைந்துவிட்டது.

தனக்கு எதிர் பக்கத்தில் நின்று ஆடிய பேட்ஸ்மேன்கள் ஒருவர் பின் ஒருவராக பெவிலியனை நோக்கி திரும்பி கொண்டிருந்த நிலையில், தன்னுடைய சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்திய விராட் கோலி சதம் அடித்தார்.

சச்சின் டெண்டுல்கர், டிராவிட், கம்பீர் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் இந்த போட்டியில் எந்த அடையாளத்தையும் உருவாக்கவில்லை. ஆனால், தன்னுடைய முதல் சதத்தின் மூலம் உலகிற்கு தன்னுடைய வரவை விராட் கோலி அறிவித்தார்.

விராட் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஒற்றுமை: ஆதிக்கம்

படத்தின் காப்புரிமை ISHARA S. KODIKARA

எதிரணியினரை இகழ்ந்து கேலி செய்து அவர்கள் விளையாட்டில் ஒருமுகப்பட்டிருப்பதை மாற்றி விடுவது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் பயன்படுத்தும் முக்கிய ஆயுதமாகும். எதிரணியினருக்கு எதிராக கருத்துகளை தெரிவிப்பது ஆஸ்திரேலிய அணியினரின் வழக்கம்.

சபித்தல், வக்கிரமான கருத்துகனை தெரிவித்ததும் இந்த இகழ்ச்சியில் அடங்குகின்றன.

எதிரணியினர் ஒருமுகப்படுத்தி விளையாடும் கவனத்தை சிதறடிப்பதே இதற்கு பின்னால் இருக்கும் நோக்கம். இந்த தந்திரத்துக்கு அனுபவம் மிக்க விளையாட்டு வீரர்கள் கூட இரையாவதுண்டு.

தாயக மண்ணில் ஆஸ்திரேலியாவை தோல்வியடைய செய்வது கடினமாக இருப்பதற்கு இதுவொரு காரணமாகும்.

இவ்வாறு இகழும் ஆயுதத்தை பயன்படுத்துவதற்கு விராட் கோலி நேர்மறையாக பதிலளிக்கிறார். மிக மோசமாக விமர்சனம் செய்வோருக்கு விராட் கோலி திருப்பி பதிலளித்து விடுகிறார். பந்துவீச்சை தும்சம் செய்வதன் மூலம் தன்னுடைய மட்டையாலும் பதிலளிக்கிறார்.

எதிரணி பந்து வீச்சாளர்களை நன்றாக ஆய்ந்தறிந்து, ஆஸ்திரேலிய ஆட்டக்களங்கள் பற்றிய தெளிவாக புரிதலை கொண்டு, ஆஸ்திரேலிய ஆட்டக்களங்களில் கோலி தன்னுடைய ஆக்திக்கத்தை நிலைநாட்டுகிறார்.

தன்னுடைய ஆட்ட நுட்பங்களில் தேவைப்படும் மீள்பார்வைகள், ரன் பட்டியல் ஒழுங்காக உயர்வதற்கு எவ்வகை மட்டையடி, எந்த நேரத்தில் விளையாடப்பட வேண்டும் என அவருக்கு தெரியும்.

ஆஸ்திரேலிய அணியினரின் இகழ்ச்சி செய்யும் தந்திரத்தால் கோலி மகிழ்ச்சியடைகிறார். அதனால் அவர் ஊக்கமடைகிறார்.

"கெட்டுப்போன குழந்தை"

படத்தின் காப்புரிமை Getty Images

2014-15ம் ஆண்டு பயணத்தின்போது, விராட் கோலி "கெட்டுப்போன குழந்தை" என்று அழைக்கப்பட்டார்.

இந்த பயணத்தின்போது நிகழந்த ஒரு சம்வத்தை நினைவில் கொள்வது நல்லது. மிஷேல் ஜான்சன் வேகமாக வீசிய பந்து ஒன்றை விராட் கோலி தடுத்தாடினார்.

அந்த பந்து ஜான்சனின் பக்கம் போகவே, அதனை எடுத்த அவர் ரன் குவிக்க ஓடுவதற்கு முன்னெறிய வீராட் மீது எறிந்தார்.

அந்த பந்து கோலி மீது பட்டு, அவர் கீழே விழுந்தார். அந்த தருணத்தில் கோலி கோபமாக பார்க்க, ஜான்சன் உடனடியாக மன்னிப்பு கோரினார்.

சில நிமிடங்களில், கோலி அடித்து ஆடிய மட்டையின் ஓரத்தில் பட்டு பவுண்டரியை தாண்டி பந்து சென்றது. இதனால் கோலிக்கும், ஜான்சனுக்கு இடையில் வாக்குவாதம் நிகழ்ந்தது.

இதன் பிறகு, கோலியை பெவிலியனுக்கு அனுப்புகின்ற வாய்ப்பை வாட்சனும், ஹெய்டனும் இழந்துவிட்டனர் என்றே சொல்ல வேண்டும்.

அதன் பின்னரும் கோலியும், ஜான்சனும் வார்த்தைகளை பரிமாறிக்கொண்டனர். பின்னர், நடுவர் ரிச்சர்ட் கெற்றில்புரேபும் அதில் தலையிட வேண்டியிருந்தது.

மரியாதை மற்றும் கௌரவ கதை (28-12-2014)

படத்தின் காப்புரிமை NURPHOTO

ஜான்சனின் நடத்தைக்கு எதிராக விராட் கோலி தெரிவித்த கருத்துகள் பரந்த கவனம் பெற்றன.

"என்னை ரன் அவுட் செய்ய முயற்சி செய்தால், ஸ்டம்பில் பந்தை எறிய வேண்டும். என்னுடைய உடம்பை நோக்கி அல்ல. ஒரு நபருக்கு எதிராக இருப்போருக்கு எதிரான செய்தி சென்றடையும் விதத்தில் செய்தியை அனுப்புவது நல்லது. எந்தவொரு நபரும் கூறுகின்ற அனைத்தையும் எல்லாவற்றையும் கேட்டு விட்டு என்னால் அமைதியாக இருக்க விடமுடியாது. என்னை மதிக்காதவருக்கு நான் ஏன் மரியாதை அளிக்க வேண்டும்," என்று விராட் தெரிவித்திருந்தார்.

நீ என்னை வெறுக்கிறாய். நான் அதை விரும்புகிறேன். ஆட்டக்களத்தில் வார்த்தை போர் நடத்துவதற்கு எதிரானவன் நான் இல்லை. அது எனக்கு உதவுகிறது. நான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுகிறேன் என்பதால், என்னால் விளையாட்டை அமைதியாக விளையாட முடியாது. எனக்கு விளையாடும் சக்தியை வழங்குவதால், வார்த்தைப் போரை விரும்புகிறேன். எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த இது எனக்கு உதவுகிறது. ஆனால், அவர்கள் இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றும் விராட் கோலி கூறினார்.

ஆஸ்திரேலிய ரசிகர்களோடு மோதல் (05-01-2012)

படத்தின் காப்புரிமை PHILIP BROWN

ஆஸ்திரேலிய ரசிகர்கள் முன் வரிசையில் இருந்து கொண்டு தங்களின் அணியை ஊக்கமூட்டி கொண்டிருந்தனர். அவர்கள் எதிரணியை இகழ்ந்து பேசி விளையாட்டு வீரர்களை ஆத்திரமூட்டினர்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் விளையாட சென்றுள்ளது. அந்த பயணத்தின்போது இந்தியா மிகவும் மோசமான தோல்வியை சந்தித்தது.

அப்போதைய போட்டிகள் ஒன்றில் பவுண்டரி எல்லைக்கு அருகில் விராட் கோலி பீல்டிங் செய்து கொண்டிருந்தார். ஆஸ்திரேலிய ரகிசர்கள் அவரை பற்றி இகழ்ந்து கருத்துகளை தெரிவித்தபோது, அவர் தன்னுடைய நடுவிரலை அவர்களுக்கு காட்டினார்.

"தன்னுடைய நடத்தையை விளக்குகையில், விளையாட்டு வீரர்கள் இவ்வாறு எதிர்வினையாற்ற கூடாது. ஆனால், ரசிகர்கள் பயன்படுத்த கூடாத வார்த்தைகளில் இகழ்ச்சியை தெரிவித்தால் நாங்கள் என்ன செய்ய வேண்டும். நான் இதுவரை கேட்டதில் மிகவும் மோசமான இகழ்ச்சியாக அது இருந்தது. இதுவொரு பாசாங்குத்தன மனப்பான்மையாகும்" என்று கோலி கூறினார்.

கோலி மீதான இத்தகைய பிம்பம் மாறிக்கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் ரசிகர்களும் விராட் கோலியின் கடுமையாக விளையாடும் மனப்பான்மையை விரும்புகின்றனர். கோலியின் ஆஸ்திரேலிய ரசிகர்களின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்துள்ளது.

ஃபாக்னெர்-ஸ்மித்-வார்னரோடு வாக்குவாதங்கள்

படத்தின் காப்புரிமை AFP

"நீங்கள் உங்களுடைய சக்தியை வீணாக்கி கொண்டிருக்கிறீர்கள். எந்த விதத்திலும் இதனால் பயன் ஏற்படாது. உங்கள் வாழ்க்கைகு ஏற்ற விதத்தில் நான் உங்களுடைய பந்துகளை தும்சம் செய்துவிட்டேன். போய் பந்து வீசுங்கள்"

ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஃபாக்னெரிடம் விராட் கோலி இவ்வாறுதான் கத்தினார்.

ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மற்றும் ரன் குவிக்கும் இயந்திரமாக விளங்கிய ஸ்டீவ் ஸ்மித்தோடும் விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் 'சேஸ் மாஸ்டர்' கவுரவம் வென்ற கோலி

படத்தின் காப்புரிமை STU FORSTER

ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். அதுவும் எதிரணி நிர்ணயிக்கும் ஸ்கோரை துரத்தி அடிப்பதில் விராட் சிறப்பாக செயல்பட்டுள்ளதை புள்ளிவிவரங்கள் தெளிவாக காட்டுகின்றன.

ஆறு ஆண்டுகளுக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் முத்தரப்பு தொடர் ஒன்றில் இலங்கை அணிக்கு எதிராக 113 ரன்கள் விளாசியிருந்தார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறப்பான வகையில் வெற்றிகரமாக சேசிங் முடித்துவைக்கப்பட்டவைகளில் இப்போட்டிக்கு சிறப்பு இடம் உண்டு என கருதப்படுகிறது. அப்போட்டியில் லசித் மலிங்காவின் பௌலிங்கை விராட் வெளுத்துக்கட்டினார்.

ஊடகங்கள் மற்றும் நிபுணர்களால் குறிவைக்கப்பட்டவர்

ஆஸ்திரேலியாவில் எந்தவொரு பிரபல தொடர் துவங்குவதற்கு முன்னரும் எதிரணி வீரர்கள் பல வகைகளில் குறிவைக்கப்படுவார்கள்.

விராட் கோலியின் அணுகுமுறை குறித்து பலமுறை ஆஸ்திரேலிய ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

அவரைப் பற்றி எப்போதெல்லாம் அதிகளவு விவாதம் நடக்கிறதோ அப்போதெல்லாம் அவரது ஆட்டத்திறன் மேம்பாட்டு காணப்படும்.

இந்தச் சுற்றுப்பயணத்தில் விராட் கோலிதான் முக்கிய விவாதப் பொருளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய பிட்சுக்கள் குறித்து விரிவான அலசல்

படத்தின் காப்புரிமை Indranil Bhoumik/Mint via Getty Images

ஆஸ்திரேலியாவில் பந்து வலுவாக எழும்பும். பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் அசந்தால் பௌன்சர்கள் பேட்ஸ்மேனை பதம்பார்க்கும். விராட் இது போன்ற சூழ்நிலைகளில் சிறப்பாக விளையாடக்கூடியவர்.

ஆஸ்திரேலிய பௌலர்கள் வேகப்பந்துக்கு பெயர்போனவர்கள்.

ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் பந்தை வேகமாக எழும்பச் செய்யும் யுக்தியை சமாளிக்க விராட் தனி திட்டங்களை வைத்திருக்கிறார். புல் ஷாட் மற்றும் ஹூக் ஷாட் போன்றவற்றின் மூலம் பௌன்சர்களுக்கு இரையாகாமல் பார்த்துக்கொள்வார்.

மற்ற நாடுகளில் பௌண்டரி அடிக்க உதவும் ஷாட்கள் மூலம் ஆஸ்திரேலிய பிட்ச்களில் இரண்டு அல்லது மூன்று ரன்கள் மட்டுமே எடுக்க முடியும். ஆகவே களத்தில் விக்கெட்டுகளுக்கு இடையே ஓடி ரன் சேகரிப்பது முக்கியம். இதில் கோலி தேர்ந்தவர்.

ஆஃப் ஸ்டம்புக்கு அப்பால் நின்று பந்துகளை எதிர்கொள்ளும் யுக்தியை கோலி கையாள்கிறார். இதனால் அவுட்டாகும் வாய்ப்பு குறைகிறது.

இதனால்தான் ஆஸ்திரேலியாவில் கடந்த 10 ஆண்டுகளில் அதிக ரன்கள் குவித்த ஐந்து பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார்.

ஆஸ்திரேலியாவில் தன்னுடைய சாதனைகளுக்காக மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறார் விராட்கோலி.

ஆஸ்திரேலியாவில் விராட் கோலியின் ரன் குவிப்பு புள்ளிவிவரங்கள்

டெஸ்ட் ஒரு நாள் போட்டி டொன்டி - 20
போட்டிகள் 8 23 8
ரன்கள் 992 1001 317
சராசரி 62.00 50.05 79.25

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: