அல்ஸாரி ஜோசப்: தாய் இறந்த துக்கத்திலும் ‘தாய்நாட்டுக்காக’ களமிறங்கிய மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்

தாய் இறந்த துக்கத்திலும் 'தாய்நாட்டுக்காக' களமிறங்கிய கிரிக்கெட் வீரர் படத்தின் காப்புரிமை Getty Images

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையே நடைபெற்ற இரண்டாவது கிரிக்கெட் டெஸ்டில், தனது தாய் இறந்ததையும் மீறி அணிக்காக விளையாடிய மேற்கிந்திய வீரர் அல்ஸாரி  ஜோசப்புக்கு அணியின் வெற்றியை கேப்டன் ஜேசன் ஹோல்டர் சமர்பித்துள்ளார்.

ஆண்டிகுவாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு நாட்கள் எஞ்சிய நிலையில் மேற்கிந்திய அணி இங்கிலாந்து அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

தனது தாய் ஷரோன் இறந்ததற்கு அடுத்த நாளில் இந்த போட்டியில் விளையாடிய 22 வயதான அல்ஸாரி  ஜோசப், 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

''இந்த சூழலில் களமிறங்கி அல்ஸாரி ஜோசப் விளையாடியது அவரின் மிகப் பெரிய தியாகத்தையும், பொறுப்பையும் காட்டுகிறது'' என்று ஜேசன் ஹோல்டர் குறிப்பிட்டார்.

''தனது தாய்க்காக சிறப்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதே அவரது விருப்பமாக எப்போதும் இருந்தது. இந்நிலையிலும் இந்தப் போட்டியில்  விளையாடிய பெருமை அவரையே சேரும்'' என்று ஹோல்டர் மேலும் கூறினார்.

மரணமும்... கிரிக்கெட்டும்

ஜோசஃப்பின் தாய் ஷரோன் மூளை கட்டி காரணமாக இறந்தவுடன், அவரை அந்த மேட்சிலிருந்து விடுவிக்கவும் தயாராக இருந்தார். ஆனால், ஜோசஃப் அந்த மேட்ச்சில் விளையாட வேண்டும். அதுதான் உண்மையாக அஞ்சலியாக இருக்கும் என்று கருதினார்.

"அவர் விளையாட விரும்பினார். அவருக்கு என்னால் வாய்ப்பளிக்காமல் இருக்க முடியாது" என்கிறார் ஹோல்டர்.

இந்த நாளும் , இந்த மேட்ச்சும் அவருக்கானது, அவர் தாய்க்கானது என்கிறார் ஹோல்டர்.

இரண்டு அணிகளும் கைகளில் கருப்புப் பட்டை அணிந்திருந்தனர். ஜோஷஃப் மைதானத்திற்கு வந்தவுடன் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :