ஐ.பி.எல் 2019 புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடம்

ஐ.பி.எல் 2019 - வென்ற சி.எஸ்.கே - கடைசி வரை பரபரப்பு குறையாத ஆட்டம் படத்தின் காப்புரிமை PTI

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு எதிரான செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் வென்று புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

சர சரவென சரிந்த விக்கெட்டுகள்

டாஸ் வென்ற டெல்லி அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.

டெல்லி அணியின் பிரித்வி ஷாவும், ஷிகர் தவானும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். பிரித்வி ஷா 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயஸ் 18 ரன்களிலும், ரிஷப் பாண்ட் 25 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். தவான் 51 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

முடிவில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது டெல்லி அணி.

19. 4 ஓவர் வரை

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 19.4 ஓவர்களில் அந்த ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

படத்தின் காப்புரிமை Getty Images

சென்னை அணியின் சார்பில் ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

ராயுடு 5 பந்துகளில் ஐந்து ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்ததாக சுரேஷ் ரெய்னா களமிறங்கினார்.

வாட்சன், ரெய்னா ஜோடியின் அதிரடி ஆட்டத்தினால் அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. அப்போது அதிரடியில் கலக்கி கொண்டிருந்த ஷேன் வாட்சன் 44(26) ரன்களில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து ரெய்னா 30(16) ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷேன் வாட்சன் 44(26) ரன்களும், டோனி 32 (35) ரன்களும் எடுத்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :