லசித் மாலிங்கவிற்கு ஐபிஎல் போட்டிகளில் பங்குபெற அனுமதி

மலிங்கா படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவிற்கு இந்தியன் பீரிமியர் லீக் போட்டிகளில் பங்கு பெறுவதற்கான அனுமதியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று வழங்கியுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மாகாணங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற்று, அவற்றில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தும் விளையாட்டு வீரர்களே, எதிர்வரும் உலகக் கோப்பை போட்டிகளுக்காக தேர்வு செய்யப்படுவார்கள் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்திருந்தது.

இதன்படி, இந்தியன் பீரிமியர் லீக் போட்டிகளில் பங்கேற்காமல், மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகளில் தான் பங்குபெற இருப்பதாக லசித் மாலிங்க இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே, இந்தியன் பீரிமியர் லீக் போட்டிகளில் லசித் மாலிங்கவிற்கு விளையாடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

எனினும், இந்தியன் பீரிமியர் லீக் போட்டிகளில் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பங்கு பெருவதால், அந்த போட்டிகளின் ஊடாக அனுபவங்களை பெற்றுக்கொள்வதற்காகவே லசித் மாலிங்கவிற்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில், லசித் மாலிங்க, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில், இந்த முறையில் இந்தியன் பீரிமியர் லீக் போட்டிகளில் பங்கேற்கவுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்