ஐ.பி.எல்: பஞ்சாப் அணியின் தோல்விக்கு காரணமான சிறு தவறு

ராணா படத்தின் காப்புரிமை Facebook
Image caption ராணா

ஐபிஎல் 2019 தொடரில் நேற்று புதன்கிழமை கொல்கொத்தாவில் நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இதில், கொல்கத்தா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய கொல்கொத்தா அணி 219 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை பஞ்சாப்புக்கு நிர்ணயித்தது.

இந்தப் பெரிய இலக்கை நோக்கி நம்பிக்கையாக ஆடிய பஞ்சாப்பால் இறுதியில் இலக்கை அடைய முடியவில்லை. இருபது ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை மட்டுமே அந்த அணியால் பெற முடிந்தது.

ராணா (நிதிஷ்), ராபின் (உத்தப்பா), ரஸ்ஸல் (ஆன்ட்ரே) என்ற கொல்கொத்தா அணியின் மூன்று "ஆர்"கள் பஞ்சாபின் அணியின் வெற்றிக் கனவைப் பறித்துவிட்டன.

ஆட்டத்தின் சுருக்கம்

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணியின் ராணா 63, ரஸல் 48, நரேன் 24 குவித்தனர்.

உத்தப்பா 67 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் தரப்பில் ஷமி, டை, சக்ரவர்த்தி, வில்ஜோன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்த இன்னிங்ஸில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம், அந்த 17 சிக்ஸர்கள் தான்.

படத்தின் காப்புரிமை Getty Images

ராணா 7 சிக்ஸரும், ரஸல் 5 சிக்ஸரும் அடித்தனர்.

219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பஞ்சாப் அணி சார்பில் கர்வால் 58 ரன் எடுத்தார். மில்லர் 59 ரன்களும், மன்தீப் 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கொல்கத்தா அணி தரப்பில் ரஸல் இரண்டு விக்கெட்டுகளையும் பெர்குசன், சாவ்லா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனால் கொல்கத்தா 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

மூன்று 'ஆர்'கள்

கொல்கத்தா அணியின் ரஸல் 21 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.

ராணா, ராபின் உத்தப்பா மற்றும் ரஸல் ஆண்ட்ரே இவர்கள் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கிறார்கள். இந்த 'ர' -க்கள்தான் கொல்கத்தா அணி.

படத்தின் காப்புரிமை PTI

டாஸில் தோற்றாலும், கொல்கத்தாவுக்கு பேட்டிங் கிடைத்தது.

இருபது ஓவர்களில் 218 ரன்களை கொல்கத்தா அணி எடுத்தது. ரானா 63 ரன்களும், ராபின் உத்தப்பா 67 ரன்களும், ரஸல் 48 ரன்களும் எடுத்தனர்.

ஒப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய சுனில் ஒன்பது பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று சிக்ஸுகளும் அடங்கும்.

திருப்பு முனை

இந்த மேட்ச்சில் திருப்புமுனையாக அமைந்தது ஒரு தவறு.

ரஸலுக்கு முகமது ஷமி போட்ட பந்தில் ரஸல் போல்ட் ஆனார். ஆனால், அது நோ பாலாக ஆகிவிட்டது.

சர்க்கிளில் பஞ்சாப் அணியின் மூன்று ஃபீல்டர்கள் மட்டும் இருந்தார்கள். அங்கு நான்கு பேர் இருந்திருக்க வேண்டும்,

இதுதான் அஸ்வின் செய்த மிகப்பெரிய தவறு.

பஞ்சாப் அணியின் வெற்றி இந்தப் புள்ளியில்தான் கைமாறியது. இந்த சமயத்தில் ரஸல் மூன்று ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். 17ஆவது ஓவர் வேறு.

ஆனால், இத்ற்கு பின்னால் நடந்த அற்புதத்தை மொத்த மைதானமும் பார்த்தது.

இது கொல்கத்தா அணியின் தொடர்ச்சியான இரண்டாவது வெற்றி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்