ஐ.பி.எல்: தொடர் தோல்விகளால் தடுமாறும் பெங்களூர் - என்ன செய்ய போகிறார் விராட் கோலி?

கோலி படத்தின் காப்புரிமை AFP

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்றிரவு அரங்கேறிய 14-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.

20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையை சிதறடித்த பட்லர்

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரஹானேவும், ஜோஸ் பட்லரும் களம் இறங்கினர். ஜோஸ் அடித்து ஆடி பெங்களூர் பந்து வீச்சாளர்களின் நம்பிக்கையை சிதறடித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

43 பந்துகளில் ஜோஸ் எட்டு ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸர் என பலமான அடித்தளம் அமைத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

கேப்டன் ரஹானேவும் அடித்து விளையாடி 22 ரன்கள் எடுத்திருந்தபோது எல்.பி.டபிள்யூ. ஆனார்.

தொடர் தோல்வியிலிருந்து மீட்சி

ராஜஸ்தான் அணி தொடர்ந்து மூன்று முறை தோல்வி உற்றது. தொடர் தோல்விக்கு பிறகான இந்த வெற்றி அந்த அணிக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

இன்னொரு பக்கம் பெங்களூர் அணி 4 தொடர் தோல்விகளை சந்தித்து தடுமாறி கொண்டிருக்கிறது.

பெங்களூர் அணியின் கேப்டன் கோலி இன்னும் 10 மேட்ச்கள் இருக்கிறது நிரூபிப்போம் என்று சொன்னாலும், அவர் அணியினருடம் அமர்ந்து பேசி சுயபரிசீலினை செய்து கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறார்.

பந்துவீச்சாளர்களைச் சிறப்பாகப் பயன்படுத்திய ரகானே

ஷ்ரேயாஸ் கோபால் தவிர, ஃஜோப்ரா ஆர்ச்சரும் 47 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.

ராஜஸ்தான் ராயல்சின் கௌதம் நான்கு ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

வருண் ஆரோன் ஒரே ஓவரில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்ததால், அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பெங்களூர் அணிக்கு சவாலாகவே இருந்தார். மூன்று ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்தார்.

படத்தின் காப்புரிமை Inpho

சென்னை - மும்பை மோதல்

மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ள  சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான ஆட்டமும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர் வெற்றிகளை ருசிக்கும் தோனியின் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை புதன்கிழமை களத்தில் சந்திக்கவுள்ளது.

இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் வென்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது..

பத்தாயிரம் கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற பெண்ணின் கதை

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்