ரஸ்ஸல் ஏமாற்றம் - சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி நடை தொடர்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மீண்டும் தோல்வி

ஜடேஜா படத்தின் காப்புரிமை Ashok Bhaumik

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடந்த ஐபிஎல் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றது.

இரண்டாவது முறையாக சென்னையிடம் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தது.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

4 ஓவர்களில் 27 ரன்களை கொடுத்து, 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் இம்ரான் தாஹிர். ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

படத்தின் காப்புரிமை Ashok Bhaumik

20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்களை கொல்கத்தா அணி எடுத்தது. கிறிஸ் லின் 82 ரன்களை குவித்தார்.

162 ரன்களை இலக்காக கொண்டு சென்னை அணி களமிறங்கியது. அதிரடி வீரர் ரஸ்ஸல் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் கொல்கத்தா அணி கடைசி ஓவர்களில் அதிக ரன்களை குவிக்க முடியவில்லை

அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா, 42 பந்துகளில் 58 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஜடேஜா அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்.

19.4 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 162 ரன்கள் எடுத்து வெற்றியை கைப்பற்றியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :