ஐபிஎல் 2019: கே.எல்.ராகுலை விமர்சனத்தில் இருந்து காப்பாற்றினாரா அஷ்வின்?

அஷ்வின்

பட மூலாதாரம், Getty Images

செவ்வாயன்று மொஹாலியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப் அணி.

இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் அஷ்வின் எடுத்த 17 ரன்கள். வெறும் 17 ரன்களா வெற்றிக்கு வித்திட்டது என்ற கேள்வியும் எழுலாம். ஆனால் அஷ்வின் இந்த ரன்களை எடுத்தது வெறும் 4 பந்துகளில்.

தங்களுக்கு இலக்காக வைக்கப்பட்ட 183 ரன்களில் வெறும் 170 ரன்களை மட்டுமே ராஜஸ்தான் அணியால் எடுக்க முடிந்தது.

டாஸை இழந்து முதலில் பேட் செய்ய வந்த பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் வெறும் 164 ரன்களை எடுத்திருந்தது.

அந்த ஓவரில் தவால் குல்கரினியின் பந்து வீச்சில் பஞ்சாப் அணியின் டேவிட் மில்லர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அவரை தொடர்ந்து களத்துக்கு வந்தார் அஸ்வின். குல்கர்னியின் அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து தனது ஆட்டத்தை தொடங்கினார் அஷ்வின்.

அதனை தொடர்ந்து மூன்றாவது பந்தில் ஒரே ஒரு ரன் எடுத்தார்.

பின்னர் எதிர்முனையில் இருந்த முஷீப் ரஹ்மான் ஒரு ரன் எடுத்தார். மீதியிருந்த இரண்டு பந்திலும் இரண்டு சிக்ஸர்களை விளாசி ரசிகர்களை மகிழ்வித்தார் அஷ்வின்.

இதன்மூலம் அஷ்வின் 4 பந்துகளில் 17 ரன்களை எடுத்திருந்தார்.

அஷ்வினின் 17 ரன்களை தொடர்ந்து பஞ்சாப் அணியின் மொத்த ரன்கள் 182 ஆக உயர்ந்தது.

183 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணியால் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெறும் 170 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

போட்டி முடிவுக்கு பின் பஞ்சாப் அணியின் கடைசி ஓவர்கள் தங்களுக்கு பெரும் நெருக்கடியை தந்ததாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே தெரிவித்தார்.

இதில் ஆச்சரியமான இன்னொரு விஷயம் என்னவென்றால் பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் 164 ரன்களை எடுத்திருந்தது அதேபோல் ராஜஸ்தான் அணியும் 19.1 ஓவர்களில் 160 ரன்களை எடுத்திருந்தது

இதன்மூலம் அஷ்வினின் அந்த 17 ரன்கள் வெற்றிக்கு வித்திட்டது என நாம் உறுதியாக கூறலாம்.

பட மூலாதாரம், PA

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் திரிபாதி 50 ரன்களையும், ஜோஸ் பட்லர் 23 ரன்களையும், சஞ்சு சாம்சன் 27 ரன்களையும், ரஹானே 26 ரன்களையும் எடுத்திருந்தனர்.

அந்த அணியின் ஸ்டூவார் பின்னி 11 பந்துகளில் 33 ரன்களை எடுத்திருந்தார் இருப்பினும் அந்த அணியால் வெற்றிபெற முடியவில்லை.

திறமையான தலைமை

இந்த போட்டியில் பஞ்சாப் அணி பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் மற்றும் கெயில் சேர்ந்து முதல் விக்கெட்டிற்கு 38 ரன்களை எடுத்திருந்தனர்.

கெயில் 22 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களை அடித்து 30 ரன்களை எடுத்திருந்தனர்.

அடுத்த முனையில் 47 பந்துகளில் 52 ரன்களை எடுத்து நிதானமாக ஆடினார் கே.எல்.ராகுல்.

அதற்கடுத்து டேவிட் மில்லர் 40 ரன்களும் மற்றும் மாயங்க் அகர்வால் 26 ரன்களையும் எடுத்திருந்தனர். அதன்பின் அஷ்வினின் அந்த 17 ரன்கள்.

பட மூலாதாரம், Getty Images

ஆனால் வெறும் ரன்களை மட்டும் எடுக்காமல் திறமையான கேப்டனாகவும் செயல்பட்டார் அஷ்வின்.

வேக பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை சரியாக பயன்படுத்திக் கொண்டார் அஷ்வின். அர்ஷ்தீப்புக்கு ஐபிஎல்லில் இதுதான் முதல் போட்டி.

இருப்பினும் அவரின் மீது நம்பிக்கை வைத்து 19ஆவது ஓவரை வழங்கினார் அஷ்வின்.

அர்ஷ்தீப்பின் ஓவரில் ஸ்டூவார்ட் பின்னி இரண்டு சிக்ஸர்களை அடித்திருந்தாலும், எதிர்முனையில் இருந்த ரஹானேவை ரன் ஏதும் எடுக்கவிடவில்லை.

ரஹானேயின் விக்கெட்டையும் வீழ்த்தினார். அப்போது ராஜஸ்தான் அணி 148 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

இந்த இடத்தில்தான் ராஜஸ்தான் அணி சறுக்கத் தொடங்கியது. 43 ரன்களை கொடுத்து அர்ஷ்தீப் இரண்டு விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

பட மூலாதாரம், Reuters

அஷ்வினும் சிறப்பாக பந்து வீசி இரண்டு விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

பஞ்சாப் அணி விளையாடிய ஒன்பது போட்டிகளில் இதுவரை அஷ்வினுக்கு இரண்டு முறை மட்டுமே பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது

இந்த வெற்றியின் மூலம் தர வரிசைப் பட்டியலில் பஞ்சாப் அணி நான்காவது இடத்தில் உள்ளது.

பஞ்சாப் அணி வெற்றிப்பெறவில்லை என்றால் மீண்டும் ஒருமுறை மெதுவாக விளையாடியதாக கூறி கே.எல்.ராகுலின் மீது விமர்சனங்கள் எழுந்திருக்கும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 47 பந்துகளில் 55 ரன்களை எடுத்திருந்தபோது அவர் அவ்வாறுதான் விமர்சிக்கப்பட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :