மும்பையின் வெற்றியில் அசத்திய 'பாண்ட்யா' சகோதரர்கள்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி

பட மூலாதாரம், TWITTER / MUMBAIINDIANS

12-ஆவது ஐபிஎல் தொடரில் நேற்று (வியாழக்கிழமை) டெல்லியில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வென்றது.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா தந்து அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

இதையடுத்து, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, டி காக் களமிறங்கினர்.

ஆரம்பம் முதலே இரு வீரர்களும் நன்கு அடித்தாடினர். ரோகித் 30 ரன்களிலும், டி காக் 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து பென் கட்டிங் 2 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்ட்யா 15 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார். இதில் மூன்று சிக்ஸர்களும், இரண்டு பவுண்டரிகளும் அடங்கும்.

இறுதியில், மும்பை அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட்டுக்கு 168 ரன்களை எடுத்தது.

பட மூலாதாரம், Getty Images

குருனால் பாண்ட்யா 37 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

பின்னர் 169 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி 20 ஒவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.

டெல்லி அணியில் பிரித்வி ஷா 20 ரன்களும், தவான் 35 ரன்களும், அக்சார் பட்டேல் 26 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

மும்பை அணி பந்துவீச்சாளர் ராகுல் சாஹர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :