ஏ பி டி வில்லியர்ஸ் அதிரடி : தொடர்ந்து 3-வது முறையாக கோலி அணி வெற்றி - பிளே ஆஃப்க்கு தகுதி பெறுமா?

மிஸ்டர் 360 டிகிரியின் அதிரடியில் மீண்டும் வென்ற பெங்களூரு

பட மூலாதாரம், AFP

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே பெங்களூருவில் நடந்த ஐபிஎல் போட்டியில் தனது வழக்கமான அதிரடி பாணியில் விளையாடிய டி வில்லியர்ஸ், பெங்களூரு அணி தொடந்து மூன்றாவது முறையாக வெல்ல உதவினார்.

வியாழக்கிழமையன்று நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

பெங்களூருவில் நடந்த நடப்பு ஐபிஎல் தொடரின் 42வது லீக் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. இதில் 'டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்கத்தில் நன்கு அடித்தாடியது. விராட் கோலி 8 ரன்களில் ஆட்டமிழக்க களமிறங்கினார் டி வில்லியர்ஸ்.

பட மூலாதாரம், Getty Images

ஆரம்பம் முதலே மைதானத்தின் அனைத்து திசைகளுக்கும் தனது அதிரடியில் அவர் பந்தை விரட்டினார். அவருக்கு பக்கபலமாக விளையாடிய பார்த்தீவ் பட்டேல் 24 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டி வில்லியர்ஸ், 44 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களும் அடங்கும்.

இதன்மூலம் மொத்தமுள்ள 20 ஓவர்களில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது.

அடுத்து வந்த மில்லர் 24 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். பூரன் 46 ரன்கள் எடுத்தார்.

இதன்பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி வீரர்கள் நிலைத்து விளையாடவில்லை. இதையடுத்து பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 185 ரன்கள் மட்டும் எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :