இம்ரான் தாஹிரின் அபார பந்து வீச்சு : சென்னையின் சுழலில் சிக்கி திணறிய டெல்லி அணி

இம்ரான் தாஹிர் படத்தின் காப்புரிமை R Senthil Kumar

தில்லி கேப்பிடல்ஸ் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீழ்த்தியுள்ளது. இதனையடுத்து 18 புள்ளிகளுடன், பட்டியலில் முதலிடத்தில் சென்னை அணி உள்ளது.

தில்லி மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தில்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரராக டூ பிளெசிஸ் களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய டூ பிளெசிஸ் 41 ரன்களில் 39 ரன்கள் அடித்தார்.

மூன்றாவது ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார் ஷேன் வாட்சன். பின்னர் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா சிறப்பாக விளையாடி, 37 பந்துகளில் 59 ரன்களை குவித்தார்.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அணியின் கேப்டன் தோனி, 22 பந்துகளில், 3 சிக்ஸர், 4 பவுண்டரிகள் என 44 ரன்களை அடித்தார்.

படத்தின் காப்புரிமை PTI

இறுதியில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்களை குவித்தது சென்னை சூப்பர் கிங்க்ஸ். 180 ரன்கள் இலக்காக கொண்டு தில்லி அணி களமிறங்கியது.

தொடக்கம் முதலே சென்னையின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது தில்லி அணி.

3.2 ஓவர்களில் வெறும் 12 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் இம்ரான் தாஹிர். ஜடேஜா மூன்று ஓவர்களில் 9 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தில்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் சற்று நிதானமாக ஆடினாலும், 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

படத்தின் காப்புரிமை R Senthil Kumar

16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது தில்லி அணி.

புள்ளிப் பட்டியலில் 18 புள்ளிகள் எடுத்து தற்போது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி முதலிடத்திலும், 16 புள்ளிகளுடன் தில்லி கேப்பிடல்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :