ஷுப்மன் கில்: கொல்கத்தா அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற அரை சதம்

தினேஷ் கார்த்திக் மற்றும் ரசல் படத்தின் காப்புரிமை Getty Images

ஐபிஎல் போட்டிகளில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி பஞ்சாப் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதனை தொடர்ந்து களம் இறங்கிய பஞ்சாப் அணி, இருபது ஓவர்களில் 183 ரன்களை எடுத்தது. அந்த அணியின் சாம் கரன் 55 ரன்களையும், நிகோலஸ் புரான் 48 ரன்களையும், மாயங்க் அகர்வால் 36 ரன்களையும் எடுத்தனர்.

கொல்கத்தா அணி வெற்றி பெற 184 ரன்கள் இலக்காக வைக்கப்பட்டது.

18 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் என்ற இலக்கை அடைந்தது அந்த அணி.

அந்த அணியின் ஷுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 65 ரன்களும், கிறிஸ் லின் 46 ரன்களும், ஆண்ட்ரே ரசல் 24 ரன்களையும், கொல்கத்தாவின் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 21 ரன்களையும் எடுத்திருந்தனர்.

கொல்கத்தா அணியில் ஏற்பட்ட மாற்றஙகள்

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷுப்மன் கில் மற்றும் கிறிஸ் லின் . ஷுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 65 ரன்களை எடுத்திருந்தார்.

இரண்டாவது தொடர் அரை சதத்தை அடித்த கில், 13ஆவது ஓவரில் அஸ்வின் பந்து வீச்சில் ஒரே ஓவரில் 18 ரன்களை எடுத்து அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தினார்.

அதன்பின் 14ஆவது ஓவரில் 17 ரன்களை அடித்தனர்.

படத்தின் காப்புரிமை MARTY MELVILLEA / AFP / GETTY IME

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரசல், 14 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து மொமத் ஷமியின் பந்தில் ஒவுட் ஆனார்.

24 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய தினேஷ் கார்த்திக், ஷுப்மன் கில்லுடன் சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்

ஷுப்மன் கில் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐபிஎல்லில் முதன்முதலில் ஆட்டநாயகன் விருது பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

இந்த போட்டியில் கொல்கத்தா அணியில் சில மாற்றங்கள் இருந்தன. ஷுப்மன் கில், கிறிஸ் லின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்.

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி தர வரிசை பட்டியலில் ஐந்தாம் இடம் பிடித்தது.

கொல்கத்தா அணி 13 போட்டிகளில் ஆறுமுறை வெற்றிப் பெற்றுள்ள நிலையில், அடுத்து மும்பை அணியை சந்திக்கவுள்ளது. அதன் முடிவே கொல்கத்தா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா என்பதை தீர்மானிக்கும்.

பஞ்சாப் அணி ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்