ஷேன் வாட்சன்: காயத்தை பொருட்படுத்தாமல் களத்தில் போராடிய வீரர்கள்

வாட்சன் படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று முடிவடைந்த ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் சிஸ்கே அணி வீரரான ஷேன் வாட்சன் 59 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். அவரின் சிறப்பான ஆட்டத்தால் சிஸ்கே அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்தது. ஆனால் ஆட்டத்தின் முடிவில் சிஸ்கே அணி 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

இதையடுத்து ஹர்பஜன் சிங் இன்ஸ்டாகிராமில் திங்கட்கிழமையன்று ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டார்.

அதில் அவர் சக வீரரான வாட்சன் ரத்தக்காயத்துடன் விளையாடியதைக் குறிப்பிட்டிருந்தார்.

வாட்சனுக்கு காயம்பட்டிருந்தாகவும், அதை அவர் யாரிடமும் கூறாமல் விளையாடியதாகவும் ஹர்பஜன் சிங் குறிப்பிட்டிருந்தார். அவருடைய இந்த செயலை மதிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

படத்தின் காப்புரிமை Twitter/Chennai Super Kings

இதேபோல் கிரிக்கெட் விளையாட்டிற்காகவும், அணிக்காகவும் தங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியவர்கள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

அனில் கும்ப்ளேவின்ஆண்டிகுவாடெஸ்ட் போராட்டம்

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த 2002-ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடந்த ஆண்டிகுவா டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது முன்னாள் இந்திய வீரர் அனில் கும்ப்ளேவுக்கு தாடையில் காயம்பட்டது. அடுத்த நாள் அறுவை சிகிச்சைக்காக பெங்களூரு செல்லவேண்டிய நிலையில் இருந்தும் கட்டுடன் வந்து பிரையன் லாராவுக்கு கும்ப்ளே பந்து வீசினார். இது கிரிக்கெட்டின் மீது அவருக்கு இருந்த பற்றைக் காட்டியது.

ஸ்டீவ் வாவின் காயத்தை விஞ்சிய போராட்டம்

2001-ல் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாவ் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் இடது காலின் தசையில் காயப்பட்ட பிறகும் ஓவல் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக 157 ரன் எடுத்தார். அந்த டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வெல்லவும் அது காரணமாக அமைந்தது

கிரிக்கெட்டுக்காக உயிரையே கொடுத்த ராமன் லம்பா

1998 ஆம் ஆண்டு தாகா ப்ரீமியர் லீக் போட்டியில் விளையாடும்போது ராமன் லம்பா பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது மெஹரூப் ஹுசைன் மிகவும் வேகத்துடன் அடித்த பந்து ராமன் லம்பாவின் நெற்றியில்பட்டு அவர் காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அதன் பிறகு மூன்று நாட்கள் கழித்து அவர் இறந்தார்.

ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹுயூக்ஸின் மரணம்

படத்தின் காப்புரிமை Getty Images

பிலிப் ஹுயூக்ஸ் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இளம் வீரர். 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரபல ஷெபில்டு ஷீல்டு தொடரில் விளையாடும் போது அவர் கழுத்தில் பந்துபட்டு மைதானத்தில் சுய நினைவை இழந்தார். இரண்டு நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் ஹுயூக்ஸ் இறந்தார்.

பாகிஸ்தான் அஹ்மது ஷேசாத்தின் காயம்

2017 ல் பாகிஸ்தான் வீரர் அஹ்மது ஷேசாத் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் விளையாடும்போது சாத்விக் வால்டனை ரன் அவுட் செய்ய முயற்சித்த போது அவருடைய லெக் பேடில் இடித்து கழுத்தில் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அஹ்மது ஷேசாத் மைதானத்தில் இருந்து ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :