கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றி, அழுத்தத்தை கையாள்வதிலேயே இருக்கிறது - விராட் கோலி

கோலி படத்தின் காப்புரிமை Getty Images

வரும் 30-ஆம் தேதியன்று தொடங்க உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க புறப்படும் முன்பு கேப்டன் விராட் கோலி மற்றும் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி செய்தியாளர்களை சந்தித்தனர் .

அப்போது பேசிய விராட் கோலி , "இந்திய அணி தற்போது சமநிலையில் உள்ளது. வீரர்கள் அனைவரும் சிறப்பாக ஆடும் நிலையில் உள்ளனர். தற்போது அணியில் உள்ள எல்லா வீரர்களும் ஐபிலில் சிறப்பாக விளையாடியுள்ளனர் என கூறினார். இங்கிலாந்தில் தற்போது நல்ல வெப்ப நிலை உள்ளது. அதனால் நல்ல பிட்ச் இருக்கும் என நம்புகிறோம். அதிக ரன்கள் உள்ள போட்டிகள் நிறைய இருக்கும் என எதிர்பார்க்கிறோம் எனவும் கூறினார்.

இந்த உலகக்கோப்பை சவால் மிக்கதாக இருக்கும். எந்த அணியும் எந்த அணியை வெல்லலாம் . குல்தீப், சாஹல் இருவரும் முக்கிய பந்து வீச்சாளர்கள். கேதார் ஜாதவ் ஐபிலில் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் அவர் தற்போது ஆடும் நிலையில் இருப்பதால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நம்புகிறோம். கவனமாக சமநிலையோடு ஆடும் அணியே கடைசிவரை செல்லும் . உலக்கோப்பையில் நாம் அழுத்தத்தை எந்தளவு கையாளுகிறோம் என்பதிலேயே வெற்றி இருக்கிறது. எனவே கவனமான நல்ல விளையாட்டை வெளிப்படுத்துவதே எங்கள் நோக்கமாக இருக்கும் என கூறினார். ஒரு போட்டிக்கும் மற்றோரு போட்டிக்கும் வேண்டிய அளவு இடைவேளை இருப்பதால் யாரும் சிரமமாக கருத மாட்டார்கள். எங்களுக்கு முதல் நான்கு போட்டிகளே கடுமையானதாக இருக்கும். இதனால் முதலிலிருந்தே நாங்கள் தீவிரமாக விளையாடுவோம் என கூறினார்.

அடுத்ததாக அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசும் போது 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தற்போது எல்லா அணிகளிலும் நிறைய மாற்றங்கள் உள்ளதால் போட்டி சவால்மிக்கதாக இருக்கும் என கூறினார். தங்களுடைய தந்திரங்கள் நெகிழ்வாக இருக்கும் என்று அவர் கூறினார். இதைத் தவிர இப்போது அணியில் உள்ள வீரர்கள் அனைவருமே ஒன்று இரண்டு ஆண்டுகளாக சேர்ந்து விளையாடுவதால் அவர்களுக்கு அது ஒரு பலமாக அமையும் என்றார். தோனி குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது , அவருடைய பேட்டிங் மற்றும் கீப்பிங் அற்புதமாக உள்ளது . இந்த உலகோப்பையில் அவர் சிறந்த வீரராக விளங்குவார் என்று கூறினார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்