உலக கோப்பை கிரிக்கெட்: 348 ரன்கள் குவித்த பாகிஸ்தான் அணி

உலக கோப்பை கிரிக்கெட் படத்தின் காப்புரிமை David Rogers

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆறாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 348 ரன்களை குவித்துள்ளது.

முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் சார்பாக தொடக்க வீரர்களாக களமிறங்கிய, இமாம் உல்-ஹக் மற்றும் பஹார் ஜமான் சிறப்பாக ஆடினார்கள்.

பஹார் ஜமான் 36 ரன்னில், மொயீன் அலி வீசிய பந்தில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து நிதானமாக ஆடிய இமாம் உல்-ஹக் 44 ஆவது ரன்னில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அடுத்து முகமது ஹபீஸ் மற்றும் பாபர் அசாம் ஆகியோரின் நிதான ஆட்டம் இங்கிலாந்து பவுலர்களுக்கு நெருக்கடியை தந்தது. இந்த ஜோடி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தினால் அணியின் ரன் உயர்ந்தது.

இந்நிலையில் தனது அரைசதத்தை பதிவு செய்த பாபர் அசாம் 63 ரன்னில் மொயீன் அலியின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

தொடர்ந்து நிலைத்து நின்று ஆடிய முகமது ஹபீஸ் 84 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 348 ரன்களை எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணியில் மொயீன் அலி மற்றும் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்களும், மார்க்வுட் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்