உலகக்கோப்பை கிரிக்கெட் 2019: இந்திய அணியின் பயிற்சியைத் தடுத்த மழை

ஷிகர் தவான்

மிகவும் பரபரப்பாக இருக்கும் ஓவல் சுரங்க ரயில் நிலையம் வெள்ளிக்கிழமை மிகவும் மந்தமாக காணப்பட்டது. அன்று மாலை வரை லண்டனில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

வழக்கமாக செய்தித்தாள்கள், சாக்லேட்கள் மற்றும் பிற ஸ்டேஷனரி பொருட்களை விற்கும் ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்த சிறிய கடைகள் மூட்ப்பட்டிருந்தன அல்லது பாதி திறந்திருந்தன.

இந்த ஓவல் சுரங்க ரயில் நிலையத்தில் இருந்து ஐந்து நிமிடங்கள் நடந்து சென்றால், சர்ரெ கவுண்டி கிரிக்கெட் அணியின் சொந்த மைதானமான ஓவல் கிரிக்கெட் மைதானத்தை அடையலாம்.

லண்டனில் அமைந்துள்ள மிகவும் பாரம்பரியம் மிக்க கிரிக்கெட் மைதானதங்களில் ஒன்றான ஓவல், ஜாசன் ரோ, சாம் குரான் மற்றும் மார்க் பௌச்சர் உள்பட பல கிரிக்கெட் வீரர்களின் சொந்த மைதானமாகும்.

படத்தின் காப்புரிமை ANDY KEARNS
Image caption கோல்டர்-நைல்

2019 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் செளதாம்டனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இந்திய அணியின் முதல் போட்டியில் வென்ற களிப்போடு, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட இந்திய அணி லண்டன் வந்தடைந்துள்ளது.

ஆனால், இந்த நகருக்கு வந்த இந்திய அணியினர் லேசான மழைத் தூறலால் வரவேற்கப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் வெள்ளிக்கிழமை சரியாக பயிற்சி எடுக்க முடியவில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி, தொடக்க ஆட்டக்கரர் ஷிகர் தவான், பேட்டிங் பயிற்சியாளர் சன்ஜாய் பன்கர் என ஒரு சிலர் மட்டுமே மைதானத்திற்கு வந்திருந்தனர். ஆனால், மழையின் காரணமாக அவர்கள் சீக்கிரமாகவே கிளம்பி சென்றுவிட்டனர்.

இந்திய கிரிக்கெட் அணியினர் பயிற்சி எடுப்பதை சீர்குலைப்பதில் மழை முக்கிய பங்காற்றியுள்ளது. இந்த மைதானத்தை சுற்றி மக்கள் அதிகமாக கூடவில்லை. செளதாம்டனில் பார்த்ததற்கு நேர்மாறான நிலைமை இங்கு நிலவியது.

செளதாம்டனில் போட்டி நடைபெறுவதற்கு முந்தைய நாட்களும் அதிக மக்கள் கூடியதை பார்க்க முடிந்தது.

பிற இடங்களில் இருந்து இந்த கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கு வந்த பலரும், தங்களுக்கு விருப்பமான கிரிக்கெட் வீரர்களை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டுமென மைதானத்தின் நுழைவாயிலில் காத்திருந்தனர்.

Image caption செளதாம்டன் நகரிலுள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இருந்து வெற்றி களிப்புடன் வெளியே வரும் இந்தியர்கள்.

ஓவல் மைதானத்திற்கு செல்லும் சாலைகள் எல்லாம் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்த போட்டியை பார்ப்பதற்கு நுழைவுச்சீட்டு வாங்குவதற்கு வெகு சிலரே வந்தனர்.

அங்கு வந்த பலருக்கும் நுழைவுச்சீட்டு கிடைத்ததால், ஏமாற்றம் அடையவில்லை.

ஓர் ஊடகப்பிரிவு, சில பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் ஒரு சில ரசிகர்களும், நுழைவுச்சீட்டு பரிசோதனை செய்வோர் சிலரும் அங்கிருந்தனர்.

இவை எல்லாம், இந்த மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முக்கியமாக போட்டி ஆட்டத்தில் முன்னால் நிகழ்பவைகளாக தோன்றவில்லை.

சனிக்கிழமையும் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதால், ஞாயிற்றுக்கிழமை போட்டி ஆட்டத்திற்கு முன்னால், இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு பயிற்சி எடுக்க வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

"இந்த நேரத்தில் மழை பெய்வது வழக்கம்தான். ஆனால், ஞாயிற்றுக்கிழமை லேசான வெயில் என்றும் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் வானிலை முன்னறிவிப்பு நல்ல செய்தியாக வந்துள்ளது.

படத்தின் காப்புரிமை GARETH COPLEY-IDI

"தென்னாப்பிரிக்காவை வென்ற இந்தியாவுக்கு, இந்த போட்டி சவால் நிறைந்ததாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடம் இந்தியா சற்று கவனமாக இருப்பது அவசியம்," என்று இந்த போட்டிக்கு நுழைச்சீட்டு வாங்குவதற்கு இங்கிலாந்தின் தெற்கு பகுதியில் இருந்து வந்த விஜய் தெரிவித்தார்.

தோனியின் பலிதான் பேட்ஜ் சர்ச்சை

கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 முதலாவது போட்டியில் இந்தியா வென்றுள்ளதை போல, ஆப்கானிஸ்தானை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், நோட்டிங்காமில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக போட்டியில் மிகவும் நெருங்கமான 15 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

படத்தின் காப்புரிமை ALLSPORT/GETTY IMAGES
Image caption டோனியின் தலைசிறந்த ஸ்டம்பிங் மூலம் ஃபெலக்வாயோ வெளியேறினார்.

"ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் கண்களுக்கு விருந்தாக அமைபவை. 'தல'தோனி இந்த முறை நன்றாக விளையாடுவார். சில மாதங்களுக்கு முன்னால் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில், தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றவர் தோனி. இது அவரது கடைசி தொடராக இருக்கலாம். அவருக்கு சிறந்ததொரு பிரியாவிடை அளிக்க நாங்கள் விரும்புகிறோம்" என்று கூறும் இந்திய ரசிகர் ஷாகிர், இந்த உலகக்கோப்பை போட்டி ஆட்டங்களில் தோனி மிகவும் நன்றாக விளையாடுவார் என்று உறுதியாக இருக்கிறார்.

தோனியிடம் இருக்கும் எதிர்பார்ப்புகளை அவரது ரசிகர்களிடம் இருந்து கேட்டு குறிப்பிடுகையில், இந்திய ராணுவத்தோடு தொடர்புடைய 'பலிதான்' முத்திரை கொண்ட கையுறைகளை தோனி அணியக்கூடாது என்று ஐசிசி தெரிவித்திருக்கும் சர்ச்சையை புறக்கணித்துவிட முடியாது.

இதற்கு தோனியின் ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

"இனவெறி அல்லது ஏதாவது ஒரு பிரிவினருக்கு எதிரான முத்திரை பொறித்த கையுறையை அணிந்து கொண்டு தோனி விளையாடவில்லை. இது அவரது விருப்பம். நாட்டின் மீது அவர் கொண்டிருக்கும் நாட்டுப்பற்றை இது காட்டுகிறது. இந்த பிரச்சனை ஊதி பெரிதாக்கப்பட்டுள்ளது," என்று தமிழ் நாட்டிலிருந்து நண்பர்களோடு வந்துள்ள யாஸ் தெரிவித்தார்.

சபாஷ்! சரியான போட்டியாக இருக்கும்!!!

உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் போட்டி தொடங்கி ஒரு வாரம் காத்திருந்து, அதன் பின்னர் செளதாம்டனில் நிகழ்ந்த தென்னாப்பிரிக்காவுக்கு முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

ஆனால், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் திரும்பி வந்திருப்பது, 5 விக்கெட்டுகளை சரித்த ஸ்டார்க் என ஆஸ்திரேலியாவின் முந்தைய போட்டிகளை பார்க்கும்போது, ஆஸ்திரேலியாவுடன் நடைபெறும் இந்த போட்டியை வெல்வது எளிதாக இருக்காது என்றே தோன்றுகிறது.

இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை ஓவல் மைதானத்தில் விளையாடியுள்ள 3 போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்த அணிகள் இரண்டு வென்றுள்ளன. வங்கதேசத்திற்கு எதிராக நியூசிலாந்து விளையாடிபோது, இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்த நியூசிலாந்து திரில் வெற்றிபெற்றுள்ளது. இதுவரை விளையாடியுள்ள இந்த ஆறு இன்னிங்ஸ்களிலும் மூன்று அணிகள் 300 ரன்களை தாண்டியுள்ளன.

ஓவல் மைதானத்தில் அதிக ரன்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், பந்து வீச்சுக்கும் இந்த களம் உதவுகிறது. வானிலை சற்று மந்தமாக இருந்தால், ரிவர்ஸ் சுவிங் பந்து வீச்சு கைக்கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

Image caption நிவில்

"இது மிகவும் நெருங்கிய சமநிலை போட்டி ஆட்டமாக இருக்கும். உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா சிறந்த வெற்றிப் பதிவுகளை கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களான ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோர் விராட் கோலிக்கும், ரோஹித் ஷர்மாவுக்கும் பந்து வீசத் தயங்குவர். மிட்ச்செல் ஸ்டார்கின் பந்துவீச்சு மிக முக்கியமாக இருக்கும். ஆனால், விராட் கோலி சற்று நிலைத்து நின்று ஆடினால், ஆஸ்திரேலியாவுக்கு பெரும் சவாலாக அமைந்துவிடும்," என்கிறார் இந்தியாவின் இந்த இரண்டாவது போட்டிக்கு நுழைவுச்சீட்டு வாங்குவதற்கு செளதாம்டனில் இருந்து வந்திருந்த நிவில்.

ஞாயிற்றுக்கிழமை வானிலை நன்றாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தாலும், இந்த பகுதியில் வானிலை மிக விரைவாக மாறிவிடுவதால், சுட்டெரிக்கும் கோடைகால வானிலையை அனுபவித்துவிட்டு இங்கு வருகின்ற இந்தியர்கள், பிரிட்டனில் "ரெயின், ரெயின் கோ அவே" என்று பாடுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :