உலகக் கோப்பை கிரிக்கெட்: ஒரு போட்டி தடைப்பட்டால் எவ்வளவு வருமான இழப்பு ஏற்படும் தெரியுமா?

கிரிக்கெட்

பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுக்கு ஞாயிற்றுக் கிழமை ஒரு கடினமான தினமாகதான் இருந்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் தோற்றது மட்டுமல்ல அவர் கொட்டாவி விடும்போது ரசிகர்கள் கண்ணில்பட்டதும்தான் அந்த நாளை அவருக்கு கடினமானதாக மாற்றியுள்ளது.

அதுவே மீம்களுக்கான கண்டென்டாகவும் மாறிவிட்டது. வர்ணனையாளர்களும் கூட அதுபற்றி குறிப்பிட தவறவில்லை.

உலக்கோப்பை விளையாட்டுகள் என்றாலே பேசுபொருளுக்கு பஞ்சம் இருப்பதில்லை. ஆனால் அதுகுறித்து பார்க்க வேண்டிய இன்னொரு விஷயம் உலகக் கோப்பை போட்டிகளை சுற்றி இயங்கும் வர்த்தகங்கள்.

மீடியா உரிமைகளில் இருந்து ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் வரை

ஒளிபரப்பு உரிமங்களில்தான் முதலில் பெருமளவிலான பணம் பார்க்கப்படுகிறது. ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வு கவுன்சிலான பார்க்கின் தகவல்படி சுமார் 700 மில்லியன் மக்கள் கடந்த வருடம் கிரிக்கெட் போட்டியை பார்த்தனர். இந்த வருடம் அந்த எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

டிஸ்னியின் ஸ்டார் இந்தியா இதுகுறித்து தீவிரமான பல நடவடிக்கைகளில் ஈடுபட்டன. 2023ஆம் ஆண்டு வரை ஐசிசி போட்டிகளை ஒளிபரப்புவதற்கான ஒப்பந்தத்தை 1.9பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு 2015ஆம் ஆண்டு கையெழுத்திட்டது அந்நிறுவனம்.

அதன்பின் ஐபிஎல்; 2022ஆம் ஆண்டு வரையான ஒளிபரப்பு உரிமம் 2.5பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கையெழுத்தானது.

கடைசியாக கடந்த வருடம் இந்திய கிரிக்கெட் போட்டிகளை 2023ஆம் ஆண்டு வரையில் உலகமுழுவதும் ஒளிபரப்புவதற்கான உரிமைத்தை 944மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கையெழுத்தானது.

அந்த நிறுவனம் டிஜிட்டல் ஸ்ட்ரிமிங்கிலும் ஒளிரப்பு செய்தது. தற்போது அனைவரும் ஸ்மார்ட் ஃபோன்களை வைத்திருக்கும் சமயத்தில் இந்த திட்டம் சம்யோஜிதமான ஒன்றுதான்.

ஜூன் 16ஆம் தேதியன்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை, ஹாட்ஸ்டாரில் 12 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்

விளம்பர விற்பனைகள்தான் அடுத்த லாபம். உலகக் கோப்பை போட்டிகள் சமயத்தில் வெறும் பத்து நொடிகளுக்கு, விளம்பரங்களை ஒளிபரப்ப 25 லட்சம் என்கின்றனர் ஊடகங்களை சேர்ந்தவர்கள். அதன்பொருள் வெறும் ஒரு போட்டியில் 100 கோடிவரை வருமானம் வரும்.

மூன்றாவது ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள். இங்குதான் ஐசிசி வருகிறது. உலகக் கோப்பை போட்டிகளுக்கு 20 பிராண்டுகள் வர்த்தக கூட்டாளிகளாக உள்ளனர் அதில் 30 சதவீத நிறுவனம் இந்தியாவை சேர்ந்தது. எம்ஆர் எஃப் டயர்ஸ், ராயல் ஸ்டாக்கும் அதில் அடங்கும்.

இந்தியாவில் விரிவாக்கம் செய்ய முயற்சி செய்துவரும் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனமான ஊபரும் கூட ஒரு வர்த்தக கூட்டாளி. முதல்முறையாக பிரபலமானவரை அது விளம்பரங்களில் பயன்படுத்தியுள்ளது. விராட் கோலிதான் அந்த பிரபலம்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய நிறுவனங்களான அமூல் மற்றும் கெண்ட்ரோ ஆகிய நிறுவனங்களும் சர்வதேச சந்தைகளில் சாதிக்க இதே மாதிரியான யுக்தியைதான் பயன்படுத்துகின்றன. அமூல் ஆப்கானிஸ்தானுக்கும் கென்ட்ரோ இலங்கை அணிக்கும் ஸ்பான்சர்களாக உள்ளன.

நான்காவது லாபம், டிக்கெட் விற்பனைகள். ஒளிபரப்பு மற்றும் ஸ்பான்சர் ஷிப் லாபங்கள் ஐசிசிக்கு செல்லும். டிக்கெட் விற்பனையில் ஏற்படக்கூடிய லாபம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் ஆணையத்துக்கு செல்கின்றன. மைதானத்தில் நடைபெறும் உணவு, குடிநீர், குளிர்பானம் மற்றும் கார் பார்க்கிங் கட்டணங்கள் மைத்தானத்திற்கு செல்லும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் நடைபெற்ற ஓல்ட் டிரஃபோர்ட் மைதானத்தில் 26,000 பேர் அமரலாம். அதன் அனைத்து டிக்கெட்டுகளும் முதல் 48 மணிநேரங்களில் விற்று தீர்ந்துவிட்டன.

கடைசி நிமிடத்தில் வாங்குபவர்களுக்கான டிக்கெட் விற்பனை தளத்தில் 6000அமெரிக்க டாலர்களுக்கு டிக்கெட் விற்கப்பட்டதாக சொல்லப்படுகிறது

ஆனால் இதற்கு பின்னால் ஒரு பெரும் குற்றச்சாட்டும் வைக்கப்படுகின்றன ஆம் ஆண்கள் கிரிக்கெட் அணி மட்டும்தாம் இத்தகைய லாபங்களை பெறுகிறது. பெண்கள் அணி இம்மாதிரியான எந்த ஒரு வர்த்தக லாபத்தையும் பெறுவதில்லை என்பதுதான் அது.

"இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 2017ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளில் தோற்றாலும், அவர்களுக்கு நல்ல வர்த்தக ஒப்பந்தங்களும், ஸ்பான்சர்களும் இருந்தன. இதில் பாகுபாடு இருந்தது என நான் கூறமாட்டேன். சர்வதேச அளாவில் ஒரு அணி வெற்றிபெற தொடங்கினால் அவர்களுக்கான கவனமும், பணமும் உயரும்." என முன்னாள் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் அஞ்சும் சோப்ரா பிபிசியிடம் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :