உலகக் கோப்பை 2019: அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்த தென்னாப்பிரிக்கா - 10 முக்கிய தகவல்கள்

faf du plessis படத்தின் காப்புரிமை Getty Images
Image caption டூ ப்ளஸிஸ்

உலகக்கோப்பை 2019 தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியும் தென்னாப்பிரிக்கா அணியும் மோதியது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வென்றது.

  • டாஸில் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான இமாம் உல் ஹக் மற்றும் ஃபகர் சமான் தொடக்கத்திலிருந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
  • மிடில் ஆர்டர் பேட்ஸ்மானான ஹாரிஸ் சோஹைல் களம் இறங்கி அதிரடியாக விளையாடினார். அவர்தான் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்காக அதிக பட்சமாக 59 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார்.
  • பாகிஸ்தான் அணி இறுதியாக 7 விக்கெட்கள் இழந்து 50 ஓவர்களில் 308 ரன்கள் குவித்தது.
  • தென்னாப்பிரிக்க அணியின் தரப்பில் அதிக பட்சமாக லுங்கி நெகிடி 3 விக்கெட்டுகளும் இம்ரான் தாஹிர் 2 விக்கெட்களும் ஃபெலக்வாயோ மற்றும் மார்க்ரம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
  • 50 ஓவர்களில் 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா தொடக்கத்தில் ஒரு விக்கெட்டை இழந்தாலும் பிறகு டீ காக்கும் டூ ப்ளஸிஸும் இணைந்து நிதானமாக ஆடத் தொடங்கினர்.
  • ஆனால் தென்னாப்பிரிக்கா அணி 91 ரன்கள் எடுத்தபோது டீ காக், ஷதாப் கான் பந்தில் இமாம் உல் ஹக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பின் அடுத்தடுத்து விக்கெட்கள் விழ ஆரம்பித்தது.
  • இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக டூ ப்ளசிஸ் 79 பந்துகளில் 63 ரன்களை எடுத்தார். ஃபெலக்வாயோ 32 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
  • பாகிஸ்தான் அணி தரப்பில் வஹாப் ரியாஸ் மற்றும் ஷதாப் கான் ஆகியோர் தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர். முகமது அமீர் 2 விக்கெட்டுகளும் அஃப்ரிடி 1 விக்கெட்டும் எடுத்தனர்.
  • இதனால் பாகிஸ்தான் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் தென்னாப்பிரிக்கா 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவி 1 போட்டியில் வென்று 1 போட்டி நடக்காமல் 3 புள்ளிகளுடன் இருக்கிறது. இந்தத் தோல்வியுடன் அரையிறுதிக்கு தகுதி பெரும் வாய்ப்பை அந்த அணி இழந்தது.
  • பாகிஸ்தான் 5 புள்ளிகளுடன் பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :