இந்தியா VS நியூசிலாந்து போட்டி: கேன் வில்லியம்ஸனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் இந்தியா?

kane williamson படத்தின் காப்புரிமை Reuters

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. மான்செஸ்டரில் நடக்கும் இந்த போட்டியில் வானிலை சீராக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

2019 உலக்கோப்பை போட்டியில் இதுவரை இந்தியாவின் ஆட்டம் சிறப்பாக இருந்து வந்துள்ளது.

ஆனால் நியூசிலாந்து அணி அதன் கேப்டன் கேன் வில்லியம்ஸனை மட்டுமே பெரிதும் நம்புவது அந்த அணியின் பலவீனமாக கருதப்படுகிறது.

நியூசிலாந்து அணியில் ராஸ் டேலர், மார்டின் குப்டில் மற்றும் டாம் லாதம் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பினும் அவர்கள் இந்த உலகக்கோப்பையில் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை. இவர்கள் மூவரும் சாதாரணமாக எவ்வளவு ரன் எடுப்பார்களோ அதில் 60 சதவீதம் மட்டுமே இந்த தொடரில் எடுத்திருக்கிறார்கள். இதனால் அதை ஈடு செய்ய கேன் வில்லியம்ஸன் அணியின் 30.28 சதவீதம் ரன் எடுக்கிறார்.

ஒன் மேன் ஆர்மி

இந்தத் தொடரில் இந்திய அணியின் மொத்த ரன்னில் 29 சதவீத ரன்களை ரோஹித் ஷர்மா எடுத்துள்ளார். அதே போன்று பிற வீரர்களும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் இந்திய அணி அதற்காக கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை.

இந்த தொடரில் விராட் கோலி சதம் அடிக்கவில்லையென்றாலும் விரைவாக அரைசதத்தை நெருங்கிவிடுகிறார். தொடக்க ஆட்டகாரரான கே. எல். ராகுலும் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்துவிட்டார். தோனி தன்னுடைய மெதுவான பேட்டிங்கிற்கு விமர்சிக்கப்பட்டாலும், எட்டு ஆட்டங்களில் 223 ரன் எடுத்துவிட்டார். அவரின் சராசரி 44 ஆக உள்ளது. ஹர்திக் பாண்டியாவும் சிறப்பாக ஆடி வருகிறார்.

படத்தின் காப்புரிமை Reuters

இதனால் இன்று ரோஹித் சரியாக விளையாடவில்லை என்றாலும் இந்திய அணி கவலைக் கொள்ளவேண்டிய அவசியமில்லை.

ஆனால் நியூசிலாந்து அணி தங்கள் அணியின் பேட்ஸ்மேன்களின் ஆட்டம் குறித்து கவலை கொண்டிருக்கிறது. இந்த உலகக்கோப்பைத் தொடரின் அதிக ரன் எடுத்த 15 பேட்ஸ்மேன்களில் நியூசிலாந்து அணியிலிருந்து கேன் வில்லியம்ஸன் மட்டுமே இருக்கிறார். ஆனால் இந்திய அணியிலிருந்து மூன்று பேர் உள்ளனர். ரோஹித் ஷர்மா முதல் இடத்திலும் விராட் கோலி 9 வது இடத்திலும் கே.எல். ராகுல் 14 வது இடத்திலும் உள்ளனர்.

நியூசிலாந்து அணி கடந்த மூன்று ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியது. இந்த மூன்று ஆட்டங்களிலும் வில்லியம்ஸன் 27, 40 மற்றும் 41 ரன்களில் வெளியேறினார்.

இந்த புள்ளிவிவரங்களின்படி நியூசிலாந்து அணியை வெல்ல இந்திய அணி வில்லியம்ஸனை விரைவில் ஆட்டமிழக்கச் செய்யவேண்டும்.

பந்தில் மட்டுமே கவனம்

இதை எப்படி செய்யமுடியும் என்பது இந்திய அணியின் மிகப்பெரிய கேள்வியாகும். 11 வருடத்திற்கு முன்பு அண்டர்-19 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து சந்தித்தபோது விராட் கோலி மற்றும் வில்லியம்ஸன் கேப்டனாக இருந்தனர்.

அந்த போட்டியில் விராட் கோலி கேன் வில்லியம்ஸனை ஆட்டமிழக்கச் செய்து தன்னுடைய அணியை வெற்றி பெற செய்தார்.

அரையிறுதி போட்டிக்கு முன்னாள் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் கோலியிடம் இதுகுறித்து கேட்டபோது, "நான் விக்கெட் எடுத்தேனா? இது மறுபடியும் நடக்குமா என தெரியாது." எனக் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

வில்லியம்ஸனை ஆட்டமிழக்கச் செய்வது அவ்வளவு எளிதல்ல. பல அணிகளுக்கு சவாலாக இருந்த விஷயம் இது. பல அணிகள் பல விதமான வித்தியாச முயற்சியில் ஈடுபட்டு அதில் சில வெற்றி கண்டுள்ளன சில தோல்வியில் முடிந்துள்ளன. வில்லியம்ஸன் இப்போது அதிக ரன் எடுத்த பேட்ஸ்மேன் தர வரிசை பட்டியலில் நான்கில் ஒருவராக உள்ளார். எந்த பந்தையும் எதிர்கொள்ள அவரால் முடியும்.

கேன் வில்லியம்ஸன் எப்போதும் பந்தில் மட்டுமே கவனமாக இருப்பார்

இதனால் அவரின் பலவீனத்தை கணிப்பது கடினம்.

சுழற்பந்து வீச்சாளர்களிடம் தடுமாற்றம்

இந்த 5 வருடத்தில் வில்லியம்சன் ஒன்றுக்கு மூன்று சதவீதம் இடது கை சுழற்பந்து வீச்சாளர்களிடம் விக்கெட் இழந்திருக்கிறார். இந்திய அணியின் முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரக்ஞான் ஓஜா 5 டெஸ்ட் போட்டிகளில் 5 தடவை வில்லியம்ஸ்னை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

வில்லியம்ஸன் சுலேமான் பேன், ரங்கனா ஹேராத், ஜுல்ஃபிகார் பேன் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரின் பந்தை சமாளிக்க தடுமாறியிருக்கிறார். அந்த வரிசையில் ரவீந்திர ஜடேஜா இந்த முறை வில்லியம்ஸனின் விக்கெட் எடுக்க வாய்ப்புள்ளது.

`த இந்தியன் எக்ஸ்பிரஸ்` ல் சந்தீப் தன்னுடைய ஆய்வில் வில்லியம்ஸனை எதிர்கொள்ள எப்படி பந்து வீச வேண்டும் என கூறியுள்ளார்.

பேக் ஆஃப் த லெந்த் மற்றும்வேகம் குறைந்த பந்து

படத்தின் காப்புரிமை Reuters

`குட் லெந்தில் சிறிய பந்து வீசினால்` கேன் வில்லியம்ஸன் தடுமாற வாய்ப்புகள் அதிகம் என அதில் கூறியுள்ளார். இவ்வாறன பந்தை அவர் எப்போதும் பேக் பாயிண்டில் அடிக்க முயல்வார். ஆனால் பந்து அவுட்ஸ்விங் ஆனால் அல்லது அவர் தன்னுடைய பேட்டை நகர்த்தி ஆடினால் அவர் ஆட்டமிழக்க வாய்ப்புள்ளது.

சுழற்பந்து வீச்சாளர்களுடன் சிறப்பாக விளையாடும் வில்லயம்ஸன் பந்து எவ்வளவு மேலெழும்புகிறது என கணிப்பதில் விட்டுவிடுவார். இதனால் அந்த பந்தை ஷாட் அடிப்பதை தவர விடுவார்.

பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் இந்த விஷயத்தைக் கொண்டு ஷாதாப் கான் அவரை வீழ்த்தினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு இருக்கிறது.

இந்த உலகக்கோப்பையில் சில சமயங்களில் வில்லியன்ஸன் வேகம் குறைந்த பந்துகளில் ஆட தடுமாறினார்.

பும்ரா, புவனேஷ்வர் மற்றும் ஹர்திக் இவர்கள் மூவரும் வேகம் குறைந்த பந்து வீசுவதில் திறம் வாய்ந்தவர்கள்.

வில்லியம்ஸனை வீழ்த்துவதே இந்திய அணியின் இலக்காக இருக்கும். அதன் பின் லோகி ஃபக்யூர்சன் பந்துவீச்சும் இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்

தொடர்புடைய தலைப்புகள்