ரோகித் ஷர்மா நியூசிலாந்து அணிக்கு எதிராக மட்டும் தடுமாறுகிறாரா ?

ரோகித் ஷர்மா படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR

2019 உலகக்கோப்பையின் சத நாயகனாக விளங்கிய ரோகித் ஷர்மா நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 4 பந்துகளில் ஒரு ரன் எடுத்து அவுட் ஆனார்.

ரோகித் ஷர்மாவின் விக்கெட் வீழ்ந்ததும் இந்திய அணியின் டாப் ஆர்டர் மளமளவென வீழ்ந்தது.

தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை அணிகளுக்கு எதிராக சதமடித்த ரோகித் ஷர்மாவை நியூசிலாந்து அணி எளிதாக வீழ்த்தியுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிராக இதுவரை ரோகித் ஷர்மா மிகப்பெரிய அளவில் சிறப்பாக செயல்பட்ட வீரர் கிடையாது.

22 முறை ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக பேட்டிங்கில் களமிறங்கியுள்ள ரோகித் ஷர்மா 703 ரன்கள் எடுத்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுடன் அபாரமாக விளையாடியுள்ள ரோகித், இந்த அணிகளுக்கு எதிராக குறைந்தது இரு சதம் விளாசியுள்ளார்.

ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு சதம் மட்டுமே விளாசியுள்ளார். நான்கு போட்டிகளில் அரை சதம் அடித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Stu Forster-IDI

சராசரி

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக 50-க்கு மேல் சராசரி வைத்திருக்கிறார் ரோகித்.

ஆனால் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக குறைவான சராசரியை வைத்துள்ளார்.

தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகளில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத்தான் குறைவான சராசரி வைத்துள்ளார்.

அதை விட சற்று கூடுதலாக நியூசிலாந்துக்கு எதிராக சராசரி வைத்திருக்கிறார்.

 • Vs வெஸ்ட் இண்டீஸ் - 61.85
 • Vs ஆஸ்திரேலியா - 61.72
 • Vs வங்கதேசம் - 60
 • Vs பாகிஸ்தான் - 51.42
 • Vs இங்கிலாந்து - 50.44
 • Vs இலங்கை - 46.25
 • Vs நியூசிலாந்து - 33.47
 • Vs தென்னாபிரிக்கா - 33.30

ஸ்ட்ரைக் ரேட்

ரோகித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் 88.65 எனும் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார்.

ஆனால் அவரது ஒட்டுமொத்த ஸ்ட்ரைக் ரேட்டை விட நியூசிலாந்துக்கு எதிராக குறைவான ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார். அதே சமயம் நியூசிலாந்தின் அண்டை நாடான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் தவிர்த்து ஐசிசி தரவரிசையில் டாப் இடங்களில் உள்ள மற்ற அணிகளில் நியூசிலாந்திடம் மட்டுமே குறைவான ஸ்ட்ரைக் ரைட் வைத்திருக்கிறார் ரோகித் ஷர்மா.

படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR

எந்த அணிக்கு எதிராக எவ்வளவு ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்?

 • Vs ஆஸ்திரேலியா - 94.08
 • Vs வங்கதேசம் - 93.35
 • Vs இலங்கை - 93.22
 • Vs வெஸ்ட் இண்டீஸ் - 90.55
 • Vs பாகிஸ்தான் - 88.77
 • Vs இங்கிலாந்து - 83.60
 • Vs தென்னாபிரிக்கா - 80.54
 • Vs நியூசிலாந்து - 77.42

நியூசிலாந்துக்கு எதிராக ரோகித் ஷர்மா கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளில் எடுத்த ரன்கள் (7 , 2 , 1)

இதுவரை 14 முறை நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சேஸிங்கில் களமிறங்கியுள்ள ரோகித், ஒரே ஒரு போட்டியில் மட்டும் அரை சதம் கடந்துள்ளார். நான்கு முறை ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் ரோகித் ஷர்மா

 • போட்டிகள் - 215
 • இன்னிங்ஸ் - 209
 • ரன்கள் - 8658
 • அதிகபட்சம் - 264
 • சராசரி - 48.91
 • ஸ்ட்ரைக் ரேட் - 88.65
 • சதங்கள் - 27
 • அரை சதங்கள் - 42
 • டக் அவுட் - 13

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்