உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து V நியூசிலாந்து வெல்லப்போகும் அணி எது? - விரிவான அலசல்

உலகக்கோப்பையை வெல்லப்போகும் அணி எது படத்தின் காப்புரிமை Gareth Copley-IDI

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு லாட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

27 ஆண்டுகளுக்கு பின்னர், இங்கிலாந்து கிரிக்கெட் அணி இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.

உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டங்களில் வென்றுள்ள இங்கிலாந்தும், நியூசிலாந்தும், முதல் முறையாக இந்தக் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைக்கும் கனவோடு இறுதிப் போட்டியில் களம் காண்கின்றன.

படத்தின் காப்புரிமை IDI

இறுதிப் போட்டியில் விளையாடும் கிரிக்கெட் அணிகளின் சாதக மற்றும் பாதக அம்சங்களில் ஓர் அலசல்.

இங்கிலாந்து
பலம் பலவீனம்
உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு தொடக்க மூன்று ஆட்டக்காரர்களின் பேட்டிங் தவிர, நடு வரிசையில் விளையாடுவோரின் பேட்டிங் சற்று சவாலாக உள்ளது.
போட்டியை நடத்தும் நாடு வெல்ல வாய்ப்புஎடுத்துக்காட்டு: 2011 - இந்தியா, 2015 - ஆஸ்திரேலியா நியூசிலாந்தின் ஃபீல்டிங்கை இங்கிலாந்து எப்படி எதிர்கொள்ள போகிறது என்பது சவாலாக அமையும்.
அணியின் வலுவான பேட்டிங் சிறப்பாக உள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். கேன் வில்லியம்ஸ், கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் ராஸ் டெய்லர், மார்ட்டின் கப்டில் மூவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் சவாலாக அமையும்.
சிறந்த பந்துவீச்சாளர்கள்
நியூசிலாந்து
பலம் பலவீனம்
அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மென்கள் இருப்பது சாதகம். எ.கா. ராஸ் டெய்லர், மார்ட்டின் கப்டில், கேன் வில்லியம்ஸ். கேன் வில்லியம்ஸ், டிரண்ட் போல்ட் தவிர போட்டியை தனியாக வெல்ல திறமை வாய்ந்த யாரும் இல்லை.
ஃபீல்டிங் மிக நன்றாக உள்ளது. அரையிறுதி ஆட்டத்தில் வெற்றிபெற ஃபீல்டிங் முக்கியமானதொரு காரணம். அனுபவம் வாய்ந்த ராஸ் டெய்லர், மார்ட்டின் கப்டில் இருவரும் சிறந்த ஃபார்மில் இல்லை.
சிறந்த பந்து வீச்சாளர்கள். டிரண்ட் போல்ட் ஓர் உதாரணம். பிறர் இவரை போல இல்லாவிட்டாலும் சிறப்பாகவே பந்து வீசுகின்றனர். இங்கிலாந்து அணிக்கு லாட்ஸ் மைதானத்தில் இருக்கும் ஆட்ட அனுபவம் மற்றும் ரசிகர்களின் ஆதரவு பாதக அம்சமாக அமையலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :