ENG Vs NZ: வெல்லப்போவது யார்? - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 தகவல்கள்

படத்தின் காப்புரிமை Michael Steele/Getty Images
  1. இந்த உலகக் கோப்பையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில், முதலில் பேட் செய்த அணியே வெற்றிப் பெற்றுள்ளது.
  2. இதுவரை நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணியுமே உலகக் கோப்பையை வென்றதில்லை.
  3. நான்கு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இங்கிலாந்து அணி 1992ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
  4. ப்ரெண்டன் மெக்கலம் தலைமையில் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் இறுதி போட்டிக்கு சென்ற நியூசிலாந்து அணி, மைகேல் க்ளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியால் வீழத்தப்பட்டது.
  5. நியூசிலாந்து அணியின் நம்பிக்கை தரும் ஆட்டக்காரராக கருதப்படுபவர் அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆவார். அவர் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போதும் அணியில் இடம்பெற்றிருந்தார்.
  1. கடந்த உலகக் கோப்பையில் அதிகபட்சமான ரன்களை நியூசிலாந்து அணியின் கப்டில் எடுத்திருந்தார். ஆனால் இந்த முறை அவர் பெரிதாக சோபிக்கவில்லை.
  2. 2008-ல் நடந்த பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை ஒருநாள் தொடர் அரை இறுதியில் இந்தியாவும் நியூசிலாந்து அணியும் மோதின. அப்போது விராட் கோலியின் பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு அவுட் ஆனார் கேன் வில்லியம்சன். அந்த போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியாக மட்டுமல்லாமல் கோலி மற்றும் வில்லியம்சனுக்கு இடையிலான போட்டியாகவும் பார்க்கப்பட்டது.
  3. இங்கிலாந்து அணி இதற்கு முன்பு விளையாடிய அனைத்து இறுதிப் போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்துள்ளது.
  4. இந்த உலகக் கோப்பை போட்டியை வெல்ல இரண்டு அணியுமே தகுதியான அணி என பார்க்கப்பட்டாலும், இங்கிலாந்து தனது சொந்த மண்ணில் விளையாடுவதால் அது அந்த அணிக்கு அது கூடுதல் சாதகத்தை அளிக்குமா என்பதை சில மணி நேரம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
  5. கடந்த உலகக் கோப்பை போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறியது இங்கிலாந்து அணி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்