உலகக் கோப்பையை இதுவரை கைப்பற்றிய நாடுகள் எவை எவை?

இந்தியா படத்தின் காப்புரிமை Hamish Blair/Getty Images

இன்று லார்ட்ஸ் மைதானத்தில் 2019 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது.

முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணி வெற்றி பெற 242 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில் இதுவரை உலகக் கோப்பையை வென்ற நாடுகள் எவை எவை என்பதை பார்ப்போம்

ஆண்டு நாடு
1975 மேற்கிந்திய தீவுகள்
1979 மேற்கிந்திய தீவுகள்
1983 இந்தியா
1987 ஆஸ்திரேலியா
1992 பாகிஸ்தான்
1996 இலங்கை
1999 ஆஸ்திரேலியா
2003 ஆஸ்திரேலியா
2007 ஆஸ்திரேலியா
2011 இந்தியா
2015 ஆஸ்திரேலியா
2019 இங்கிலாந்து

இன்று நடைபெற்ற போட்டியின் முதல் இன்னிங்ஸின் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 242 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி.

நான்கு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இங்கிலாந்து அணி 1992ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ப்ரெண்டன் மெக்கலம் தலைமையில் 2015ஆன் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் இறுதி போட்டிக்கு சென்ற நியூசிலாந்து அணி, மைகேல் க்ளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியால் வீழத்தப்பட்டது.

கடந்த உலகக் கோப்பை போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறியது இங்கிலாந்து அணி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்