IND vs WI கிரிக்கெட்: அடித்து ஆடிய கோலி, வெற்றி பெற்றுத் தராத கெயிலின் 72 ரன்கள்

IND vs WI: மழையால் தடைப்பட்ட ஆட்டம், இறுதியில் வென்ற இந்தியா படத்தின் காப்புரிமை Getty Images

வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டக்வொர்த் லூயிஸ் முறையில் இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது.

மழைக்கு மத்தியில் நடந்த இந்தப் போட்டியில் கோலியின் 100 ரன்கள் துணையுடன் இந்தியா இந்த மேட்சில் வென்றுள்ளது.

"மழை... மழை"

இந்த மேட்சில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயிலும் இபின் லெவிஸூம் களம் இறங்கினர்

ஆட்டம் தொடங்கி இரண்டாவது ஓவரிலேயே மழையின் காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. இதன் காரணமாக ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

மழைக்கு பின் தொடர்ந்து ஆடிய கெய்ல் அடித்து விளையாடினார். அரைசதம் எடுத்தார். இதன் காரணமாக, முதல் 10 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது.

115 ரன்களை எட்டிய போது கெய்ல் லீவிஸ் ஜோடி பிரிந்தது. சாஹலின் பந்து வீச்சில் லீவிஸ் வெளியேறினார். அடுத்த ஓவரிலேயே 72 ரன்களுடன் கெய்ல் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

மழையால் தடைபட்ட ஆட்டத்தில் 35 ஓவராக ஆட்டம் குறைக்கப்பட்டது. இறுதியில், மேற்கிந்தியத் தீவுகள் 240 ரன்கள் எடுத்திருந்தாலும், டக்வொர்த் லூயிஸ் முறையில் இந்திய அணிக்கு இலக்கு 255 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டது.

சொதப்பலில் இருந்து சிறப்பை நோக்கி

முதலாவதாக ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஜோடி களமிறங்கியது. ரோஹித் சர்மா 10 ரன்னில் அவுட் ஆனார். தவானும் 36 ரன்களில் அவுட ஆனார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் கடந்த போட்டியைப் போல கோலியுடன், ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்திய அணியை சரிவிலிருந்து தடுத்தது இந்த ஜோடி.

அடித்து விளையாடிய கோலி

விராட் கோலி 48 பந்துகளில் முதலில் தனது அரை சதத்தை பதிவு செய்தார். ஸ்ரேயாஸ் அய்யர் தனது அரை சதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 65 ரன்களில் அவுட் ஆனார். கோலி 94 பந்துகளில் சதம் அடித்தார்.

இந்தியா வெற்றி

படத்தின் காப்புரிமை Getty Images

இறுதியில் இந்திய அணி 32.3 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்