சுமித் நாகல்: ரோஜர் பெடரருக்கு அதிர்ச்சியளித்த இளம் இந்திய வீரர்

சுமித் நாகல் படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி தொடரின், முதல் சுற்று போட்டியில் ஜாம்பவான் வீரரான ரோஜர் பெடரரை முதல் செட்டில் தோற்கடித்துஅதிர்ச்சியை உண்டாக்கினார் இளம் இந்திய வீரர் சுமித் நாகல்.

முதல் சுற்றை 6-4 என சுமித் வெல்ல, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது, தனது சிறப்பான சர்வீஸ் மற்றும் ரிடன்களால் நாகல் முதல் செட்டை வென்றார்.

இறுதியில் தனது அனுபவத்தால் அடுத்த 3 செட்களையும் வென்று போட்டியை வென்றார் ரோஜர் பெடரர்.

22 வயதான சுமித் நாகல் டென்னிஸ் தரவரிசைப்பட்டியலில் 190-வது இடத்தில் உள்ளார். இவர் டெல்லி என்சிஆர் பகுதியில் பிறந்து வளர்ந்தவர் ஆவார்.

நாகல் இதற்கு முன்பு 2015-இல் விம்பிள்டன் இளையோர் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம்கள் வென்றுள்ள பெடரர், 2003-ஆம் ஆண்டு முதல் எந்த கிராண்ட்ஸ்லாம் தொடரிலும் முதல் சுற்றில் தோல்வியடைந்ததில்லை.

நாகலின் ஆட்டத்திறனை முதலில் அடையாளம் கண்ட டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி, தனது டென்னிஸ் அகாடமியில் இவருக்கு பயிற்சி அளித்தார்.

இந்த பயிற்சிக்கு பிறகு ஜெர்மனியில் சில நாட்கள் நாகல் சிறப்பு பயிற்சி மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்