'தோனி ஓய்வு குறித்து வந்த தகவல் பொய்யானது' - இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.பிரசாத்

எம் எஸ் தோனி படத்தின் காப்புரிமை Nathan Stirk

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுகிறார் என்று வரும் செய்திகள் பொய்யானவை என்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளதாக செய்தி ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

எம்எஸ் தோனி, டி20 மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போகிறார், அந்த அறிவிப்பை வெளியிட செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தப்போகிறார் என்றும் இன்று பிற்பகல் வதந்திகள் பரவத் தொடங்கின.

அதனைத் தொடர்ந்து #Dhoni என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாக தொடங்கியது.

இந்நிலையில் அவரது ரசிகர்கள், தோனி ஓய்வுப் பெறக்கூடாது என்று உருக்கமாக ட்வீட் செய்து வந்தனர்.

முன்னதாக, விராட் கோலியும், தோனியுடம் தான் ஆடிய விளையாட்டு குறித்து ட்வீட் செய்திருந்தார்.

"நான் என்றுமே மறக்க முடியாத இரவு. என் உடற்பயிற்சி சோதனையில் எப்படி ஓடுவேனோ அப்படி ஓட வைத்துவிட்டார் தோனி" என்று எம்எஸ் தோனியுடன் விளையாடியதை நினைவு கூர்ந்து பதிவிட்டார் தற்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி.

இந்த ட்வீட்டை வைத்து தோனி ஓய்வு பெறப் போகிறார் என்ற முடிவுக்கு அவரது ரசிகர்கள் வந்திருக்கலாம்.

"தயவுசெய்து கிரிட்கெட்டில் இருந்து விலகாதீர்கள் தோனி" என் ட்விட்டர் நபர் ஒருவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

தோனி, நாங்கள் இதற்கு தயாராக இல்லை என்று சாதியா ரஹ்மான் என்ற ட்விட்டர் நபர் தெரிவித்துள்ளார்.

"ஓய்வை அறிவிக்காதீர்கள் தோனி, இந்திய அணிக்கு நீங்கள் தேவை. நீங்கள் சென்றுவிட்டால் அது பெரிய பின்னடைவாக இருக்கும். இன்னொரு சச்சின் கிடைத்துவிட்டார். ஆனால் இன்னொரு தோனி கிடைக்கவில்லை"

"ஓய்வு பெறாதீர்கள் தோனி. அப்படியே நீங்கள் ஓய்வு முடிவு எடுத்தாலும், அதற்கு முன்பு ஒரே ஒரு கடைசி மேட்ச், ஒரே ஒரு கடைசி சிக்ஸர் எங்களுக்கு வேண்டும்"

கிரிக்கெட் விளையாடினாலும், ஓய்வு பெற்றாலும், நான் உங்களை வழிபட்டேன், இனியும் வழிபடுவேன் என்கிறார் ரித்தீஷ் தூபே.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :