ராணி ராம்பால் அடித்த கோல்: ஒலிம்பிக்ஸ் 2020க்கு தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி

Hockey india படத்தின் காப்புரிமை Hockey india

2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் விளையாட, இந்தியப் மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது.

புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அமெரிக்க அணியை 6-5 என்ற கணக்கில் இந்திய அணி தோற்கடித்தது.

வெள்ளியன்று நடத்த முதல் போட்டியில் இந்தியா 5-1 என முன்னிலையில் இருந்தது. இன்றைய போட்டியில் அமெரிக்கா 4-1 என்ற அளவில் வென்றது.

இரண்டு போட்டிகளின் கோல் கணக்கையும் சேர்த்து இந்தியா 6-5 என்ற அளவில் முன்னிலை பெற்றது.

ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி கத்ரீன் ஷேர்க்கீ தலைமையிலான அமெரிக்க அணியுடன் ஒலிம்பிக்ஸ் தகுதிப் போட்டியில் இன்று மோதியது.

மாஸ்கோவில் 1980ல் நடைபெற்ற ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணி, 36 ஆண்டுகளுக்கு பிறகு 2016இல் ரியோவில் விளையாட தகுதி பெற்றது. தற்போது 2020 ஒலிம்பிக்ஸில் விளையாடும் தகுதியை பெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Hockey india
Image caption ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி கத்ரீன் ஷேர்க்கீ தலைமையிலான அமெரிக்க அணியை வென்றது.

இன்றைய ஆட்டத்தின் கேப்டன் ராணி ராம்பால் அடித்த ஒரே கோல், இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தது.

ஒலிம்பிக்ஸிற்கு தகுதி பெற்றுள்ள பெண்கள் அணிக்கு ஒடிஷா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக், வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :