"முதல் காதல் ஹாக்கிதான்" - இந்தியாவின் முதல் ஒலிம்பிக் வீராங்கனையின் நினைவலைகள்

"முதல் காதல் ஹாக்கிதான்" - இந்தியாவின் முதல் ஒலிம்பிக் வீராங்கனையின் நினைவலைகள்

68 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1952இல் பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் 100 மீட்டர் தடகள போட்டியில் பங்கேற்றதன் மூலம் மேரி டிசோசா வரலாறு படைத்தார்.

இவரும், அதே போட்டியில் பங்கேற்ற நீலிமா கோஷும், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய பெண்கள். இந்தியா சுதந்திரம் பெற்ற பின் நடைபெற்ற இந்த ஒலிம்பிக் போட்டியில், மேற்குறிப்பிட்டுள்ள இரு வீராங்கனைகள் மட்டுமின்றி நீச்சல் பிரிவில் டாலி நசிர், ஆரத்தி சாஹா ஆகிய வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்திய ஹாக்கி அணியிலும் விளையாடிய மேரிக்கு தற்போது 80 வயதுக்கு மேலாகிறது. தற்போது தனது மகளுடன் அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் வசித்து வரும் மேரி, மும்பை புறநகர் பகுதியில் இருந்து ஒலிம்பிக் வரையிலான தனது வியப்பளிக்கும் பயணம் குறித்து பிபிசியுடன் பகிர்ந்து கொண்டார்.

காணொளி தயாரிப்பு: ஜான்வி மூலே, பிபிசி மராத்தி

ஒளிப்பதிவு: கரீஸ்மா சினாய்

புகைப்பட உதவி: மரிசா செக்வீரா

வரைகலை: ஆஸ்டின் கோடின்ஹோ

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: