ரூபா சிங்: பரியேறி சாதித்த பெண்ணின் போராட்ட கதை

ரூபா சிங்: பரியேறி சாதித்த பெண்ணின் போராட்ட கதை

இந்தியாவின் முதல் பெண் ஜாக்கியான (தொழில்முறை நடத்துநர்) ரூபா சிங், குதிரை பந்தயத்துறையில் தான் சந்தித்த சவால்களையும், அதில் அடைந்த உயரங்களையும் பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார்.

''7,8 வயதிலேயே குதிரை கண்காட்சியில் நான் குதிரை மீதேறி வலம் வந்தது பலரையும் வியப்படைய வைத்தது. ஆனால், சில ஆண்டுகள் கழித்து ஒரு ஜாக்கியாக பணிபுரிவதை என் தொழிலாக தேர்ந்தெடுத்த பின்னர் பலர் அதை விமர்சனம் செய்தனர்''

''நண்பர்கள், உறவினர்கள் மட்டுமல்ல, ரேஸ்கோர்ஸில் பணிபுரிபவர்கள் கூட மறைமுகமாகவும், என் தந்தையிடம் கூட ஏன் உங்கள் பெண்ணை இந்த ஆபத்தான பணிக்கு அனுப்பவேண்டும் என்று வினவினர். அக்காலகட்டத்தில் பலரும் என்னை ஊக்குவிப்பதைவிட என் ஊக்கத்தை குறைப்பது போல பேசினர்'' என்று அவர் மேலும் விவரித்தார்.

காணொளி தயாரிப்பு: சிவக்குமார் உலகநாதன்

ஒளிப்பதிவு: ஜெரின் சாமுவேல்

படத்தொகுப்பு: ரவிஷங்கர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: