சென்னை ஆடுகளத்தில் சதம் அடித்த அஸ்வின்

சென்னை ஆடுகளத்தில் சதம் அடித்த அஸ்வின்

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில், இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான ரவிச்சந்திரன் அஸ்வின். நேற்றைய ஆட்டத்தில் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நடைபெற்று வரும் போட்டியில் மூன்றாம் நாளான இன்று இங்கிலாந்து பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்ட அஷ்வின், 14 பவுண்டரிகள், 1 சிக்ஸ் அடித்து சதம் அடித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் அடிக்கும் ஐந்தாவது சதம் இதுவாகும். அவர் நிகழ்த்திய சாதனையை விவரிக்கிறது இந்த காணொளி.

வாக்களிக்க: Indian Sportswoman of the Year 2020

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: