டோக்யோ ஒலிம்பிக் பூங்கொத்துகளுக்கு பின்னால் உள்ள துயரக் கதை இதுதான்

ஒலிம்பிக் பிங்கொத்து

பட மூலாதாரம், Matthias Hangst/Getty Images

ஒலிம்பிக் பதக்கம் வெல்வது எந்த ஒரு விளையாட்டு வீரர், வீராங்கனைக்கும் மறக்க முடியாத தருணமாகவே இருக்கும்.

இருப்பினும் தற்போது நடைபெற்று வரும் டோக்யோ 2020 ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களின் கைகளில் ஒரு பூங்கொத்து இருப்பதை நீங்கள் கண்டிருக்ககூடும். சிலர் அது என்ன பூங்கொத்து என்று கூட வியந்திருக்க கூடும். இதோ அந்த மலர் கொத்துகளுக்கு பின்னால் உள்ள துயரக்கதை.

இதுவரை ஒலிம்பிக் மற்றும் பாரலிம்பிக் போட்டிகளில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பூங்கொத்துகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பூங்கொத்துகளில் உள்ள பூக்கள் குறிப்பாக ஜப்பானின் வட கிழக்கு பகுதியில் மூன்று மாவட்டங்களில் விளைகின்றன. இந்த மூன்று மாவட்டங்களும் 2011ஆம் ஆண்டு பூகம்பம் மற்றும் சுனாமி, பின் ஃபுகுஷிமா அணு ஆலையில் அடுத்தடுத்த விபத்துக்குள்ளான அணு உலைகள் ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இவாடே, ஃபுகுஷிமா மற்றும் மியாகி ஆகிய மாவட்டங்களை தாக்கிய இந்த பேரழிவால் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

ஒலிம்பிக் மற்றும் பாரலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் பூங்கொத்தில் உள்ள மஞ்சள், பச்சை மற்றும் நீல நிற பூக்கள் கிட்டத்தட்ட இந்த மூன்று மாவாட்டங்களில் தான் விளைகின்றன.

பூங்கொத்தில் பளிச்சென்று காணப்படும் மஞ்சள் நிறப் பூக்கள் மியாகி மாவட்டத்தில் விளைந்தவை. இந்த பூக்கள் அந்த பேரழிவில் குழந்தைகளை இழந்த பெற்றோர்களால் நடப்பட்டவை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

2011ஆம் ஆண்டு நடைபெற்ற பேரழிவு ஜப்பானை புரட்டிப் போட்டது.

பெற்றோர்கள் இந்த பூக்களுக்கான செடிகளை நடுவதற்கு மலைப்பக்கத்தை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் உண்டு. அங்குதான் அவர்களின் குழந்தைகள் சுனாமியிலிருந்து தப்பிக்க ஓடினர் என்பதுதான் அந்தக் காரணம்.

அழகிய வெள்ளை மற்றும் ஊதா நிறத்திலான எஸ்டோமாஸ் மற்றும் சாலமன் சீல் எனப்படும் பூக்கள் ஃபுகுஷிமாவில் விளைந்தவை. இந்த பூக்கள் பேரழிவால் சிதைந்து போன பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையாக லாப நோக்கமற்ற ஒரு தன்னார்வல நடவடிக்கையால் விளைவிக்கப்பட்டவை.

ஏற்பட்ட பேரழிவால் அந்த மாவட்டத்தின் விவசாய உற்பத்தி பெரும் பாதிப்பை சந்திருத்த்து குறிப்பிடத்தக்கது.

அழகிய, சிறிய, நீல நிறத்தினாலான பூக்கள் இவாடே மாவட்டத்தில் ஒரு கடற்கரை பகுதியில் விளைந்தவை. அந்த கடற்கரை நகரம் 2011ஆம் ஆண்டு பேரழிவில் முழுவதுமாக அழிந்துபோனது.

பட மூலாதாரம், Wang Xianmin/CHINASPORTS/VCG via Getty Images

படக்குறிப்பு,

இந்தியாவின் மீராபாய் சானு மற்றும் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனைகள்

இந்த பூங்கொத்தை மேலும் முழுமையாக்க டோக்யோவில் விளைந்த ஆஸ்பிடிஸ்டிராஸ் பூக்கள் சேர்க்கப்ப்ட்டுள்ளன. இந்த பூக்கள் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நகரை குறிப்பதற்காக சேர்க்கப்பட்டவை.

கடந்த 2020ஆம் ஆண்டில் ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் நடைபெறவில்லை. ஜப்பானிலேயே பலத்த எதிர்ப்புக்குப் பிறகு, இந்திய நேரப்படி இன்று ஜூலை 23 மாலை 4.30 மணிக்கு ஒலிம்பிக் போட்டிகளுக்கான தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதுதான் ஒலிம்பிக் போட்டியின் அதிகாரப்பூர்வ தொடக்கம்.

இந்த ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :