பிரியங்க் பாஞ்சல் : இந்தியா vs தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் டெஸ்ட்டில் ரோஹித் சர்மாவுக்கு மாற்றாக களமிறங்கும் வீரர் - சுவாரசியமான 10 தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ரோஹித் சர்மா காயம் காரணமாக விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக பிரியங்க் பாஞ்சலை அணியில் சேர்த்திருக்கிறது பிசிசிஐ.
உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரோஹித் சர்மாவுக்கு மாற்று வீரராக அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து கவனம் பெற தொடங்கியிருக்கிறார் பிரியங்க் பாஞ்சல். அவரைப் பற்றிய சுவாரசியமான 10 தகவல்கள்.
1. குஜராத் மாநிலம் அகமதாபாத்தை பூர்விகமாகக் கொண்ட 31 வயதான பிரியங்க் பாஞ்சல் ஓர் வலது கைது தொடக்க ஆட்டக்காரர். இவரால் பந்துவீசவும் முடியும் என்பது கூடுதல் சிறப்பு
2. கடந்த 2008ஆம் ஆண்டில் விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணிக்கு களமிறங்கியதன் மூலம் முதல் தர கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார்.
3. மகாராஷ்டிராவுக்கு எதிரான அறிமுக ஆட்டத்திலேயே 115 பந்துகளில் 123 ரன்கள் விளாசி அணியில் தனது இடத்தை உறுதி செய்தார்
4. 2016-2017 ரஞ்சி தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 17 இன்னிங்சில் 1310 ரன்கள் குவித்தது மட்டுமின்றி முதல்முறையாக குஜராத் அணி ரஞ்சி கோப்பையை உச்சிமுகர முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
5. 2016ல் ரஞ்சி தொடரில் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் முச்சதம் விளாசி 314 ரன்கள் சேர்த்தார். இதுவே அவரது அதிகபட்ச ரன்களாகும். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் முச்சதம் விளாசிய முதல் குஜராத்தியர் எனும் சாதனையையும் தட்டிப்பறித்தார்.
6. இதுவரை 100 முதல் தர போட்டிகளில் விளையாடி 24 சதங்களுடன் மொத்தம் 7011 ரன்கள் விளாசியுள்ளதோடு 14 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளார்.
7. குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட பர்தீவ் பட்டேல் கடந்த ஆண்டுடன் ஓய்வுபெற்றதை அடுத்து, புதிய கேப்டனாக பாஞ்சல் நியமிக்கப்பட்டார்.
8. 2019ல் இந்தியா ஏ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பாஞ்சல், தற்போதைய இந்திய அணி பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
9. ஊடக வெளிச்சம் பெரிதும் இல்லை என்றாலும் தனித்துவமான ஆட்டக்காரர்களில் ஒருவராக வலம் வரும் பிரியங்க், இதுவரை எந்த ஐபிஎல் தொடரிலும் விளையாடியதில்லை.
10 "இந்திய கிரிக்கெட் அணியின் சீருடையை அணிவதை கெளரவமாக கருதுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்த பிசிசிஐக்கு நன்றி" என பிரதான அணியில் இடம் பிடித்தது குறித்து ட்வீட் செய்துள்ள பன்சால், கே.எல் ராகுல், மயங்க் அகர்வால் எனும் அனுபவம் வாய்ந்த தொடக்க ஆட்டக்காரர்களுடன் தனக்கான இடத்தை பிடிக்க பந்தயத்தில் இறங்கியிருக்கிறார்.
பிற செய்திகள்:
- மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
- அப்பாவிகள் கொல்லப்பட்ட ஆப்கான் தாக்குதல்: 'யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள்' - அமெரிக்கா
- இந்தியாவால் இலங்கையில் சீனாவிற்கு ராஜிய ரீதியில் பின்னடைவா?
- மூன்றாம் அலையை எதிர்கொள்ள எவ்வாறு தயாராகிறது இந்தியா?
- காஷ்மீர் காவல்துறை வாகனம் மீது தீவிரவாத தாக்குதல், இருவர் உயிரிழப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்