ககன் நரங்குக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா

  • 29 ஆகஸ்ட் 2011
ககன் நரங்

இந்திய துப்பாக்கி சுடும் நட்சத்திரம் ககன் நரங்குக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்ற வருடம் தில்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருந்தவர் ககன் நரங் ஆவார்.

விளையாட்டு வீரர்களை கௌரவிப்பதற்காக இந்திய அரசு வழங்கும் மிக உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது ஆகும்.

ஏழரை லட்ச ரூபாய் ரொக்கப் பணமும், பதக்கமும், பாராட்டுப் பட்டயமும் அடங்கிய இந்த விருதை திங்கட்கிழமையன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த வைபவத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாடில் 28 வயது ககன் நரங்குக்கு வழங்கினார்.

காமன் வெல்த் தங்கங்கள் மட்டுமின்றி, சென்ற வருடம் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இவர் வெண்கலம் வென்றிருந்தார்.