டேகூ 400 மீட்டர் ஓட்டப்பந்தயம்: கிரானிக்கு தங்கம்

தென்கொரியாவில் நடந்துவருகின்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆண்கள் நானூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கிரனடாவைச் சேர்ந்த 18 வயதான கிரானி ஜேம்ஸ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

நானூறு மீட்டர் பிரிவில் தற்போதைய ஒலிம்பிக் சாம்பியனான அமெரிக்காவின் லா ஷான் மெரிட்தான் டேகூவிலும் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் மிகவும் குறைவான வித்தியசத்தில் கிரானி ஜேம்ஸ் லா ஷான் மெரிட்டை வீழ்த்தியிருந்தார்.

நூனூறு மீட்டரைக் 44.6 வினாடிகளில் கடந்த ஜேம்ஸ், அமெரிக்க வீரரை வெறும் அரை மீட்டர் வித்தியாசத்தில் வென்றார்.

அண்மையில் லண்டனில் நடந்த டயமண்ட் லீக் போட்டிகளிலும் 400 மீட்டர் பிரிவில் கிரானி ஜேம்ஸ் முதலிடம் பெற்றிருந்தார்.

800 மீட்டர் பிரிவில் தற்போது உலக சாதனைக்கு சொந்தக்காரரான கென்யாவின் டேவிட் ருடிசியா எளிதாக வென்றுள்ளார்.