ஊக்க மருந்து பயன்படுத்தியதை லான்ஸ் ஆர்ம்ஸ்டிராங் ஒப்புக்கொண்டார்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 18 ஜனவரி, 2013 - 10:17 ஜிஎம்டி

ஓபரா வின்ஃபிரியிடம் தொலைக்காட்சிப் பேட்டியளித்துள்ளார் லான்ஸ் ஆர்ம்ஸ்டிராங்

ஊக்க மருந்துப் பயன்பாட்டுக்காக விளையாட்டுப் பட்டங்கள் பறிக்கப்பட்ட அமெரிக்காவின் முன்னாள் சைக்கிளிங் வீரர் லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங், தனது குற்றங்களை முதல் தடவையாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

சொடுக்கு ஆர்ம்ஸ்டிராங் வீடியோ பேட்டி ஆங்கிலத்தில்

டூர் த பிரான்ஸ் என்ற நெடுந்தூர சைக்கிள் போட்டியை ஏழு முறை தான் வென்றபோதும் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்துகளைத் தான் பயன்படுத்தியிருந்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

அந்த ஊக்க மருந்து பயன்படுத்தியிருக்கவில்லை என்றால் தன்னால் அந்த வெற்றிகளை ஈட்ட முடிந்திருக்காது என்று அவர் கூறினார்.

அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி தொகுப்பாளினி ஓபரா வின்ஃப்ரியிடம் கருத்துவெளியிட்ட ஆர்ம்ஸ்டிராங், ஒரு பெரிய பொய்யை தான் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

குணாதிசயத்தில் கோளாறு உடையவன் என்று அவர் தன்னை வருணித்துள்ளார்.

ஊக்க மருத்து பயன்படுத்தியதாக தான் போட்டிகளில் பங்கேற்ற காலங்களில் பல சமயம் எழுந்த குற்றச்சாட்டுகளை தசாப்தங்கள் கணக்கில் மறுத்து வந்தவர் லான்ஸ் ஆர்ம்ஸ்டிராங் ஆவார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.