கிரிக்கட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை அணி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 18 ஜனவரி, 2013 - 13:01 ஜிஎம்டி
வெற்றிக்களிப்பில் நுவன் குலசேகர

வெற்றிக்களிப்பில் நுவன் குலசேகர

பிறிஸ்பர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கட் போட்டியில் இலங்கை 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

26. 4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 74 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணியின் பந்து வீச்சாளரான நுவன் குலசேகர 22 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கட்டுக்களை கைப்பற்றினார். மலிங்க அடுத்த படியாக 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

உண்மையில் நுவன் குலசேகரவின் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய முன்னணி ஆட்டக்காரர்கள் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள்.

அந்த அணியில் மிட்செல் ஸ்டார்க் மாத்திரம் ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களை எடுத்திருக்கிறார். சேவியர் டொகர்த்தி 15 ஓட்டங்களை எடுக்க ஏனைய எவரும் இரட்டை இலக்கத்தை எட்டவில்லை.

அடுத்து ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 75 ஓட்டங்களை பெற்று, 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

அந்த அணியின் சார்பில் திலகரட்ண டில்சானும் குசால் பெரேராவும் தலா 22 ஓட்டங்களை எடுத்தார்கள். 11 ஓட்டங்களைக் கொடுத்த ஜோண்சன் இலங்கை அணியின் மூன்று விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

ஆடிய மைதானம் பந்துவீச்சுக்கு உகந்ததாக இருந்த காரணத்திலால் இலங்கை அணி கூட துடுப்பாட்டத்தில் அவ்வளவு சோபிக்கவில்லை. இரு அணிகளுமே இந்த ஆட்டத்தில் சிக்சர் எதனையும் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

5 ஒரு நாள் ஆட்டங்களைக் கொண்ட இந்த தொடரில் இதுவரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் முன்னணியில் திகழ்கிறது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.