டெண்டூல்கருக்கு வயது 40

  • 24 ஏப்ரல் 2013
சச்சின் டெண்டூல்கர்
Image caption சச்சின் டெண்டூல்கர்

சச்சின் டெண்டூல்கர் புதன் கிழமையன்று தனது 40 ஆவது பிறந்தநாளை கொல்கத்தா நகரில் கொண்டாடினார். ஐபிஎல் போட்டியில் விளையாட அவர் அங்கு சென்றுள்ளார்.

இதையொட்டி அவர் விளையாடும் மும்பை அணியைச் சேர்ந்த வீரர்கள் அவருக்கு 40 கிலோ எடையுள்ள கேக்கை பரிசாக அளித்துள்ளனர்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தவரும், சர்வதேசப் போட்டிகளில் நூறு சதங்களை அடித்தவருமான சச்சின் டெண்டூல்கர் ஏற்கனவே ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றுவிட்டார்.

நாடாளுமன்ற நியமன உறுப்பினராக உள்ள சச்சின் டெண்டூல்கர் சமீப மாதங்களாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடவிட்டாலும் மிகுந்த அனுபவம் வாய்ந்த அவரின் இருப்பு அணிக்கு பெரிய பலமாகவே பார்க்கப்படுகிறது.

தனது 16 வயதில் சர்வதேசப் போட்டிகளில் களமிறங்கிய சச்சின், 40 வயதிலும் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பது கிரிக்கெட் மீது அவர் கொண்டிருக்கும் மாறாத ஆர்வத்தையும், அவரின் அர்பணிப்பையும் காட்டுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.