விடை பெறும் சச்சின் டெண்டுல்கருக்கு பாரதரத்னா விருது

  • 16 நவம்பர் 2013
Image caption விடைபெற்றார் சச்சின்

புகழ் பெற்ற இந்தியக் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. அதேவேளை இந்திய அரசு அவரைக் கௌரவிக்கும் வகையில் உயர் விருதான பாரதரத்னா விருதை அறிவித்துள்ளது.

மும்பை நகரில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக, இந்தியாவின் இறுதி மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா வென்றுள்ள நிலையில், அவரது முதல் இன்னிங்ஸ் ஆட்டமே அவரது கிரிக்கெட் வாழ்வின் இறுதி ஆட்டமாக முடிந்தது.

முதல் இன்னிங்ஸில் 74 ரன்கள் எடுத்த சச்சினுக்கு, இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் மீது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 126 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டதால், இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டாவது முறை ஆடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

கிரிக்கெட் போட்டிகளில் நூறு சதங்களை அடித்தவர் என்ற பெருமையுடன் 40 வயதான சச்சின் விடை பெறுகிறார்.