உலக சதுரங்கப் போட்டி: ஆனந்த் சாம்பியன் பட்டத்தை பறிகொடுத்தார்

Image caption ஆனந்த்-கார்ல்சன் போட்டி

நோர்வேயின் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

2007ம் ஆண்டிலிருந்து உலக சதுரங்க சாம்பியனாக இருக்கும் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தை, 22 வயதான மேக்னஸ் கார்ல்சன் தோற்கடித்தார்.

சென்னையில் நடந்த இந்த 12 போட்டித் தொடரில், மூன்று போட்டிகளில் வென்று, ஏழு போட்டிகளை சமன் செய்ததன் மூலம் கார்ல்சன் இந்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.